தேவதூதன்
Phoenix, Arizona, USA
48-0304
1எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு இன்னும் பத்து ஆண்டுகளே உள்ளன என்று சகோதரன் பிரன்ஹாம் சொன்னார்' என்று சொல்லிக்கொண்டு யாரும் இப்பொழுது இங்கிருந்து செல்ல வேண்டாம். அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது; யாருக்குமே தெரியாது. பரலோகத்திலுள்ள தூதர்களும் கூட அறியார்கள். எனக்குத் தெரியாது. ஆனால் அது மிகவும் சமீபமாயுள்ளது என்று நான் அறிவேன். அவர் சொல்லிய அடையாளங்களெல்லாம் சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. 'அது வாசலருகே வந்திருக்கிறது' என்று அவர் சொன்னார். நாம் சரியாக இப்பொழுதே அவைகளைப் பெற்றுள்ளோம்.
2சபைக்கு வரங்கள் திரும்ப அளிக்கப்படுதல்தான் அடுத்ததாக சம்பவிக்க வேண்டிய காரியம் என்று நான் அறிவேன். முன்னோடியாக இருக்கும் இந்த உத்தியோகத்தை நான் செய்ய வேண்டியவனாயுள்ளேன். அது கடினமான ஒரு காரியமாகும். ஜனங்களைப் பார்க்கும் போது... தேவன் தமது சபையை பிரித்தெடுக்கும் வரை சபைக்கு வரங்கள் திரும்ப அளிக்கப்பட முடியாது. வரங்கள் சபையில் வருவதற்கு முன்பாக, முதலாவதாக நாம் சபையை ஒன்றாக சேர்க்க வேண்டியதாயுள்ளது.
3ஆனால் முழு சுவிசேஷ ஜனங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, ஒரே இருதயத்தோடு வருவார்களானால், முழு உலகத்தையும் அசைக்கும் ஒரு எழுப்புதல் உண்டாகும். அது சம்பவித்த பிறகு, ஒவ்வொரு ஆவிக்குரிய வரமும் சபையில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அளிக்கப்பட்டு விடும். நாம் சபையை ஒரே இசைவோடு ஒன்றாக பெறக் கூடுமானால், அப்போஸ்தலர்கள் மூலம் செய்யப்பட்ட அடையாளங்களும் அற்புதங்களும், இப்போது சம்பவிப்பதைக் காட்டிலும் அற்ப காரியமாயிருக்கும். அது சம்பவித்தாக வேண்டும். அது சம்பவிக்கும். அது ஒருவேளை நான் காட்சியை விட்டு போன பிற்பாடு சம்பவிக்கலாம். ஆனால் நீங்கள் கட்டாயம் இதை அறிந்திருக்க வேண்டுமென்று என் வார்த்தைகளை உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னுடைய சத்தமானது...
4ஓ, கிறிஸ்தவ ஜனங்களே, நீங்கள் ஒருமனப்பட்டு ஒரே இருதயத்துடன் ஒன்றாக இணைந்திருங்கள். சபையானது பிரிவினைகளைக் கொண்டதாக இருக்குமட்டும் தேவன் சபைக்கு வரங்களை அளிக்க முடியாது. நாம் ஒருமனப்பட்டவர்களாய் இல்லாமல் போனால், தேவன் பரிசுத்த ஆவியை அனுப்ப மாட்டார். அது சரியே. அது பரிசுத்த ஆவியானவர் மூலமாக வருகிறது. அதை விசுவாசியுங்கள்.
5நான் தேவதூதனைக் குறித்து வலியுறுத்திக் கூறுவதையும், சுகமளித்தலைக் குறித்து அது உண்மையானது என்று கூறுவதையும், அது உண்மையென்று அறிந்திராத ஒரு நபராவது கூட்டத்தில் எப்பொழுதாவது இருந்திருக்கிறார்கள் என நான் நம்பவில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய சொந்த கண்களுக்கு முன்பாகவே நீங்கள் அதைப் பார்த்துள்ளீர்கள். நிச்சயமாக.
ஜனங்கள் சுகமடையாதவர்களாக மேடையை விட்டுக் கடந்து செல்வதை நான் கண்டிருக்கிறேன். கிறிஸ்துவிடம் வந்த ஆயிரக்கணக்கானோர் சுகமடையவேயில்லை. அவர், 'நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நான் உங்களை சுகமாக்க முடியும்' என்று கூறினார். ஆனால் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அநேக மகத்தான கிரியைகளை செய்ய முடியவில்லை. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
6நீங்கள் ஜெபர்ஸன்வில்லுக்கு வந்து, எப்பொழுதாவது என்னை சந்தியுங்கள். நீங்கள் அங்கு வந்து என்னைக் காண்பீர்களா? நாங்கள் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்போம். ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்புங்கள். நான் அப்படியே... அதை என்னுடைய வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். எனக்கு கூடுமான எந்த நேரத்திலும்... நீங்கள் என்னை அழைக்கலாம். நீங்கள் வியாதியஸ்தராக இருந்தால், நான் தொலைபேசியில் அதற்காக ஜெபிப்பேன்.
நான் ஒவ்வொரு முறையும் வர முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. நான் வழக்கமாக, 'மழையின் போதோ வெளிச்சத்தின் போதோ உங்களிடம் வருவேன்' என்று கூறுகிறேன். நான் கனடாவிலிருந்து வருகிறேன். ஏறக்குறைய பதினாறு அல்லது பதினெட்டு விமான பயணச் சீட்டுகள் அங்கே இருக்கின்றன. ஓ, நான் அப்போது வியப்படைந்தேன். பாருங்கள், உங்களால் போக முடியாது, ஏனெனில் நீங்கள் ஒரு இடத்திற்குப் போகும்போது, அங்கே வேறொன்றிருக்கும். இங்கே ஒன்று, இங்கிருந்து மற்றொன்று, எங்கு போக வேண்டுமென்று உங்களுக்கு - உங்களுக்குத் தெரியாது.
ஆனால் நான் - நான் உங்களை நேசிக்கிறேன். மேலும் உங்களுக்கு உதவி செய்ய நான் இங்கிருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் நிரூபித்துக் காண்பிக்க முயல்வதற்கு என்னால் கூடுமான எல்லாவற்றையும் நான் செய்யப் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.
7இப்பொழுது, இங்கிருந்து போவதற்கு முன், ஜெப வரிசையை ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த சிறு வேத வாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன். மத்தேயு 4-ம் அதிகாரம், 23 மற்றும் 24-ம் வசனங்கள்.
(மத்தேயு 4:23,24)
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திர ரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
8இப்பொழுது, நீங்கள் விரும்பினால், எங்கிலுமுள்ள சபையோர் எல்லாரும் சிறிது நேரம் நமது தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது, உண்மையாகவே பயபக்தியாயிருங்கள். உங்களுடைய தலை வணங்கியிருக்கையில், நான் தேவனிடம் வேண்டுதல் செய்வேனானால், தேவன் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, உங்களை சுகப்படுத்துவார் என்று ஜெப வரிசையில் வரும் உங்களில் எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள் என்று நான் இப்பொழுது ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அறிய விரும்புகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
நண்பர்களே, கர்த்தருடைய தூதன் என்னிடம், 'ஜனங்கள் உன்னை விசுவாசிக்க செய்யக் கூடுமானால்...' என்று சொன்னார். இப்பொழுது, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நான் உங்களிடம் கூறுகிறேன். இன்றிரவு நீங்கள் இந்த (ஜெப) வரிசையை கடந்து செல்லும்போது, நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று ஜனங்களிடம் சொல்லிக்கொண்டு, உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு சந்தோஷத்தோடு, களிகூர்ந்தவர் களாய் இங்கிருந்து வெளியே செல்லுங்கள். போய் சாட்சி கூறுங்கள். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதற்கு முன்பாக, சீஷர்கள் பத்து நாட்களாக எருசலேமில் தங்கியிருந்து, இடைவிடாது தேவனை துதித்துக்கொண்டிருந்தார்கள்.
9பிதாவே, இந்த சாயங்கால வேளையில், இந்த அருமையான சிறு போனிக்ஸ் பட்டணத்திற்கு மூன்றாவது தடவையாக வருகை தருவதற்காக கிடைத்த மற்றொரு சிலாக்கியத்திற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். இங்கிருக்கும் சூரியனின் பள்ளத்தாக்கு நான் சிறுவயது முதற்கொண்டே என் இருதயத்தில் மிகவும் வாஞ்சித்த இடமாகும். ஓ, தேவனே, இந்த பட்டணத்திலுள்ள ஒவ்வொரு சபையிலும் நீர் ஒரு-ஒரு எழுப்புதலை எப்படியாவது ஆரம்பிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், தேவனே. அதை அருளும், கர்த்தாவே. ஒரு மகத்தான அசைக்கும் எழுப்புதல் இந்த பட்டணத்திற்கு வருவதாக.
பிதாவே, நீர் அசைவாட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு தேவனுடைய தூதனானவர் இங்கே இந்த பிரசங்க மேடையின் மேல் நின்று, இந்த மேடையை விட்டு கடந்து செல்லும் ஒருவரும் சுகமடைந்தவர்களாக அன்றி செல்ல வேண்டாம் என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே, நான் ஒரு உத்தமமான இருதயத்தோடு உம்மிடம் கதறுகையில், என் ஜெபத்தைக் கேட்டருளும். நான் எவ்வாறு முழு இருதயத்தோடும் உம்மை சேவிப்பது என்று நான் அறிந்து, மிகச்சிறந்த முறையில் உம்மை சேவிக்க முயற்சிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். இன்றிரவு என் ஜெபத்தைக் கேட்டருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சகோதரன் கார்சியாவை ஆசீர்வதியும்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)
ஓ, நான்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) மேலும் அது... (ஒலிநாடாவில் காலியிடம்.)... வரிசையில். ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். அவள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)...?... அது வரை...?... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நான் அவளுடைய கையை பிடித்த போது. நிச்சயமாக அங்கே... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) துடிப்பை உணர்ந்தேன், ஏனெனில் அமிலத்தின் காரணமாக கீல்வாத நோய் (arthritis) இருந்தது. அந்த ஸ்திரீக்காக ஜெபித்தேன். மேலும்... (ஒலிநாடாவில் காலியிடம்.)
10அவள் தன்னையே மறந்த நிலையில் உள்ளாள் என்பதை அவளுடைய கண்கள் காண்பித்தது. நான் அப்படியே அவளைக் கடந்து சென்றேன், நிச்சயமாக. அதன் பிறகு, நான் அதை விட்டு போய் விட்டு, சில நாட்களுக்குள் மீண்டும் திரும்பி வந்தேன். அவளுடைய புருஷன் கதவருகில் நின்று கொண்டிருந்தார். அவர், 'சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய மனைவிக்கு ஏதோவொன்று சம்பவித்தது. மூளைக் கோளாறு கொண்டவளைப் போன்று பேசுகிறாள்' என்றார்.
நான், 'எது உமக்கு தவறாகத் தோன்றுகிறது?' என்று கேட்டேன்.
அவர், 'நல்லது. அது இவ்வாறு தான் உள்ளது. அவள் ஜெபித்துக் கொண்டிருந்த போது... நீர் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்த போது, அவள் வீட்டை அடையும் வரை மெய்மறந்த நிலையில் காணப்பட்டாள். நீர் அவளுக்காக ஜெபித்த போது உம்மோடு கூட அங்கு வந்திருந்த அந்த மற்ற மனிதர் யார் என்று அவள் என்னிடம் கேட்டாள்' என்று கூறினார்.
நான், 'அங்கே வேறு எந்த மனிதனும் இல்லையே' என்றேன்.
'ஓ, சரிதான். கருமையான மயிரைக் கொண்டு, வெண் வஸ்திரம் தரித்தவராயிருந்த ஒரு மனிதன்' என்றார்.
நான், 'சகோதரனே, மீண்டும் அதை சொல்லுங்கள்' என்றேன். அவர் அதை திரும்பவும் கூறினார். நான், 'அது பிரத்தியட்சமான கர்த்தருடைய தூதனானவர் தான்' என்றேன். பாருங்கள்?
அவள், 'ஏன், சகோதரன் பிரன்ஹாம் ஜெபித்துக் கொண்டிருந்த போது, அவர் சகோதரன் பிரன்ஹாமையே கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் பேசினார்' என்றாள். அவர், 'இப்பொழுது, நீ சுகத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாய். சகோதரன் பிரன்ஹாமின் ஜெபம் கேட்கப்படும்; நீ சுகமடைவாய்' என்றார். ஆனால், 'சகோதரன் பிரன்ஹாம் மிகவும் பலவீனமாக காணப்படவில்லையா?' 'ஆனால் அவர் சிறிது கழிந்து பலமடைந்து விடுவார்' என்றார். ஆகவே அது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. பாருங்கள், 'சிறிது கழிந்து அவர் பலத்தோடிருப்பார்.'
11இப்பொழுது, அந்த ஸ்திரீ ஒருபோதும் இந்தக் கதையைக் கேட்டிருக்கவில்லை. அவர் ஒரு பெரிய மனிதராக இருந்தார் என்றும், கருமையான மயிர் அவருடைய தோள்கள் வரை கொண்டவராய், கரும் பழுப்பு நிற முகத்தைக் கொண்ட வராய் இருந்தார் என்றும் அந்த ஸ்திரீ கர்த்தருடைய தூதனைக் குறித்து விளக்கிக் கூறினாள். அவள், 'அவர் பிரசங்க மேடையை விட்டு வெளியே கடந்து வந்ததை நான் கண்டேன்' என்றாள். அவள் அதைக் குறித்து தன்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவில்லை. 'சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபிப்பதற்காக முழங்கால் படியிடுகையில், அந்த மனிதன் நோக்கிப் பார்த்து விட்டு, அங்கே மேலே வந்தார்; ஜெபிப்பதற்குப் பதிலாக அவர் அப்படியே தொடர்ந்து சகோதரன் பிரன்ஹாமையே கவனித்துக் கொண்டிருந்தார்' என்றார். மேலும், 'அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, 'இப்பொழுது, நீ சுகமடைவதற்காக வந்திருக்கிறாய், நீ சுகமடைவாய்' என்றார்' என்று கூறினாள். அதன்பிறகு, 'இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாம் மிகவும் மெலிந்து காணப்படவில்லையா? ஆனால் சிறிது கழிந்து அவர் பலமானவராக ஆவார்' என்றார். பாருங்கள்? மேலும், 'அவர்கள் தூக்குப்படுக்கையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல தொடங்கின போது, அவர் வாசல் வரை என்னுடன் நடந்து வந்தார், அது தான் அவரை நான் கடைசி யாக கண்டது' என்றாள்.
12இப்பொழுது, அது தேவனுடைய தூதனானவர் ஆகும். அவர் ஆராதனைகளில் அநேக சமயங்களில் காணப்படுகிறார். அவர் இன்றிரவும் இங்கேயிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் இங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் இங்கிருந்த முதற்கொண்டு மூன்று அல்லது நான்கு தடவைகள் அவர் இருப்பதை உணர்ந்தேன்.
இப்பொழுது, அந்த யாரோ ஒருவர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்... இப்பொழுது, அநேக ஜனங்கள் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இப்பொழுது, நண்பர்களே, இது தூதனை ஆராதிப்பதை அர்த்தப்படுத்தவில்லை. அது அவ்வாறு கிடையாது. நான் அந்த தூதனின் நாமத்தில் ஜெபிப்பதில்லை, அல்லது அவருடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்தால், தேவன் தம்முடைய ஜனங்களை அனுப்புகிற போது, அவர்களை வழிநடத்த ஒரு தூதனும் இருக்கிறான். மோசே...
நீங்கள், 'நல்லது, புதிய ஏற்பாட்டைக் குறித்து என்ன?' என்று கேட்கலாம்.
நிச்சயமாக. அது எப்போதும் கர்த்தருடைய தூதனாக இருந்தான். அது சரியே. பேதுரு சிறைச்சாலையில் இருந்த போது, அந்த கர்த்தருடைய தூதன் இறங்கி வந்து (அது சரியா?), அவனை விடுவித்தான். மேலும் ஓ, என்னே, அனேக தடவை கள். அவர்...
பவுல் மக்கதோனியாவுக்கு வருகையில், அவனைக் குறித்து என்ன? அவன் கப்பற்சேதத்தில் இருந்த போது, அந்த இரவில் கர்த்தருடைய தூதன் அவனுக்குத் தோன்றி அவனுடைய கரங்களில் அவர்கள் எல்லாவற்றையும் அவர் கொடுத்திருப்பதாக கூறினார். நிச்சயமாக. அது எப்போதுமே... பவுல் ஒருபோதும் தூதனை ஆராதிக்கவேயில்லை.
வெளிப்படுத்தினவனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை முழுவதுமாக எழுதி முடித்த பிறகு, அவன், 'இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை (அது சரியா?) வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்' என்றான். அவனோ, 'தேவனைத் தொழுதுகொள்' என்றான். அவர் தன்னுடைய உடன் ஊழியக்காரனையும் அந்தத் தீர்க்கதரிசிகளையும் உடையவனாக இருந்தார். பாருங்கள்?
கவனியுங்கள். தேவன் எப்பொழுதும் இயற்கைக்கு மேலாக இயற்கைக்கு மேம்பட்டவைகளை அனுப்புகிறார். வெண்கல சர்ப்பம், (பெதஸ்தா) குளம், இன்னும் மற்றவைகளைப் போல. இயேசுவும் கூட யாரையாவது சுகமாக்கும் போது கிடைக்கும் மேன்மையை தமக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. அது சரியா? அவர், 'இந்த கிரியைகளைச் செய்வது நானல்ல; என்னில் வாசமாயிருக்கும் என் பிதாவானவரே இவைகளை எல்லாம் செய்கிறார்' என்றார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)
13அவர் மரித்து விட்டார் என்று மருத்துவர்கள் அறிந்து கொண்டார்கள். அக்குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கும்படி நான் சென்றிருந்தேன். வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்தேன், அந்த மனிதனுடைய மனைவி அழுது கதறுவதாக காணப்பட்டது. நான் வெளியே வாசலண்டை வந்த போது, ஒரு மனித கரமானது என் தோளின் மேல் வைக்கப்படுவதாக காணப்பட்டது. அது என்னைப் பற்றிக் கொள்வதை உணர்ந்தேன். நான் முன்னோக்கி செல்ல ஆரம்பித்த போது, என்னால் அசையவே முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்த போது, அக்கரமானது என்னை விட்டு விலகிப் போய் விட்டது.
நான் படுக்கையருகில் சென்று அந்த மனிதனை உற்றுக் கவனித்தேன். அங்கே அறையில் ஒரு மெதொடிஸ்டு ஊழியக்காரரின் மனைவியும், மற்றொரு சகோதரியும் இருந்தனர். நான் ஜெபிக்கத் தொடங்கினேன். நான் என் சுயநினைவுக்கு வந்த போது, நான் மரித்துப் போன அந்த மனிதனுடைய சரீரத்தின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன். அம்மனிதனுடைய முகத்தின் மேல் ஒரு துணியானது, குறைந்தது அரை மணி நேரமாக விரிக்கப்பட்டிருந்தது. என்னுடைய முகமானது சரியாக அவன் மேல் வைக்கப்பட்டிருந்தது. நான் ஆவிக்குரிய தேசத்திலிருந்து அவனை, 'சகோதரன் எலியா' என்று அழைத்தேன். அவனுடைய பெயரானது எலியா ஆகும். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறியாமலேயே அவனுடைய ஆவியை அந்த தேசத்திலிருந்து, 'சகோதரன் எலியா' என்று கூப்பிட்டு வருமாறு அழைத்தேன்...
நான் அவனை அழைத்துக் கொண்டே சிறிது நேரமாக அங்கேயே இன்னும் படுத்திருந்தேன். அந்த மனிதனுடைய கரமானது என்னுடைய காதுகளைச் சுற்றி வருவதை உணர்ந்தேன். அந்த மனிதன் பிழைத்துக் கொண்டான். அவன் இன்றிரவு பென்சில்வேனியாவிலுள்ள இரயில் போக்குவரத்து துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான்.
14இப்பொழுது, அது உண்மையென்று தேவன் அறிவார். அது உண்மையில்லாதிருந்தால், இப்பொழுது சரியாக இந்த பிரசங்க பீடத்திலேயே அவர் என்னை கொன்று போடட்டும். ஆனால் ஒவ்வொருவராலும் அதை விசுவாசிக்கக் கூடும் என்று அது அர்த்தப்படுத்துவதில்லை. என்னால் எதையுமே செய்ய முடியாது. அந்த தூதனானவர் செய்வது போல நானும் செய்ய வேண்டியவனாயுள்ளேன். ஆனால் நீங்கள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)
ஆனால் சுகமளித்தலுக்கு என்ன அவசியமாயுள்ளது? உங்க ளுடைய... கவனியுங்கள். நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிற காரியமானது ஏற்கனவே பரலோக சேமிப்பு பெட்டியில் உங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து நம்முடைய மீறுதல் களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். அது சரியா? பாருங்கள், அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது.
இதைப்போன்று, நான்... ஐயாயிரம் டாலர்கள் பெறுமானமுள்ள ஒரு அஞ்சல் காசோலையை அல்லது பண அஞ்சலை நான் உங்களுக்குக் கொடுப்பேனானால், நல்லது, நீங்கள், 'அந்த பண அஞ்சல் நன்மைபயக்குமா?' என்று கேட்கலாம். நிச்சயமாக. அரசாங்கம் நம்பகமானதாக இருந்தால், அது ஏன் நம்பகமானதாக இருக்காது? அந்த மணியார்டரை எழுதியவர், முழு அரசாங்கமும்... அந்த மணியாடர் எழுதப்படுவதற்கு முன்னால், முதலாவதாக ஐயாயிரம் டாலர்கள் பணம் செலுத்தியாக வேண்டும், அந்த மணியார்டர் எழுதப்படுவதற்கு முன்பாக. அது உண்மை தானே? முதலாவது பணம் செலுத்தியாக வேண்டும்.
15நல்லது, அந்த... இப்போது பாருங்கள். அந்த சேமிப்பு... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) உன் சுகத்திற்காக தேவனுடைய மருந்தக அறையில் அல்லது கல்வாரி சிலுவையில் அவர் அறையப்பட்ட அந்த நாளில் அவருடைய வங்கியில் அது செலுத்தப்பட்டது. நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என் பதைப் பார்க்கிறீர்களா? அப்போது அவர் நம்முடைய மீறுதல் களினிமித்தம் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானோம். உன்னுடைய சுகமானது கிரயம் செலுத்தப்பட்டு வாங்கப்பட்டது. ஓ, என்னே. அது உன்னுடையது. நீ செய்ய வேண்டிய தெல்லாம் நீ அங்கு அடைந்து அதை பெற்றுக் கொள்ளுதலாகும்.
இப்போது, தேவன் தம்முடைய வரங்களை அனுப்புவேன் என்று வாக்குத்தத்தம் செய்துள்ளதை ஜனங்கள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியதாயுள்ளது. அது சரியா? சரீரத்திற்கென ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது. அது விசுவாசிகளைக் கொண்ட சரீரம். அவைகள் அவிசுவாசிகளுக்கல்ல. தெய்வீக சுகம் அதை விசுவாசிக்காத உங்களுக்கு அல்ல. அது விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே. பரிசுத்த ஆவி அதை விசுவாசிக்காதவர்களுக்கல்ல. அது அதை விசுவாசிக்கிறவர்களுக்கே அருளப்பட்டுள்ளது.
16இப்பொழுது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் வருவதற்கு முன்பு, சபையானது மெதொடிஸ்டு களின் நாட்களில் சடங்காசாரமானதாக ஆகத் தொடங்கியது. ஜனங்களாகிய நீங்கள் விடுதலைக்காக தேவனிடம் கதறினீர்கள், தேவன் (பரிசுத்த) ஆவியின் ஞானஸ்நானத்தை அனுப்பினார். இப்பொழுது, அது முதற்கொண்டு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றதன் மூலம் ஜனங்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து விடுதலையாக்கப்பட்டனர். அது சரிதானே? இப்பொழுது, அதை விசுவாசிக்காதவர்கள் அதை பெற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும்.
எனவே, அவர் வார்த்தையைப் பிரசங்கிப்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட பிரசங்கிமார்களை அனுப்பினார். நீங்கள் அதைப் (பரிசுத்த ஆவியைப்) பெற்றுக் கொண்டீர்கள். இப்பொழுது நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்... இங்குள்ள எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்க்கட்டும்? இப்பொழுது, அது அருமையானது. என்னே, அங்கே பாருங்கள், ஏறக்குறைய நூறு சதவீதம் பேர். அது அற்புதமானது. ஓ, என்னே. நாம் எதையும் செய்யக்கூடியவர் களாக இருக்க வேண்டும். அது சரியே. ஏன், அங்கே இப்பொழுது கிடையாது...
17ஏன், பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள அநேக விசுவாசிகள் இங்குள்ளனர், வல்லமையற்ற ஒரு நபராவது அடுத்த சில மணி நேரங்களில் உங்கள் மத்தியில் இருக்க வேண்டாம். அது சரியே. கட்டிலில் படுத்திருக்கும் சகோதரியே, நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்? அது அவ்வாறு தான் என்று நீ விசுவாசிக்கிறாயா? சரி.
இப்பொழுது, கவனியுங்கள். உங்களால் விசவாசிக்கக் கூடுமானால். இப்பொழுது, நான் (சபை) கட்டிடத்துக்குள் வருவதற்கு முன்பே நான் எப்பொழுதும் என் அறையில் ஜெபத்தில் இருக்கும் போதே சம்பவிக்கப்போகும் அநேக அற்புதங்களைக் காண்கிறேன். இங்கிருக்கும் உங்களெல்லாரிலும் எத்தனை பேர் சுகமளிக்கும் வரம் என்னிடம் எவ்வாறு வந்ததென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் அதைக் கேள்விப் பட்டதில்லையா? உங்களில் அநேகரை நான் காண்கிறேன். ஏனெனில் சென்ற தடவை அதை உங்களிடம் நான் சொன்னேன். அதைக் குறித்து... நீங்கள் அதை இன்னும் விசுவாசிக்கிறீர்களா? ஓ, அது அருமை யானது. அது அருமையானது.
இப்பொழுது, நாம் இங்கே வார்த்தையிலிருந்து சிறிது வாசித்து, சிறிது நேரம் அதைப் போதித்து, பிறகு நாம் சுகமளிக்கும் ஆராதனைக்காக ஆயத்தமாக வேண்டுமென்று விரும்புகிறோம்.
18இப்பொழுது, இது நம்முடைய எஜமானரின் ஆரம்ப கால ஊழியத்தின் போது சம்பவித்ததாகும். அவர் எங்கிலுமுள்ள ஜனங்களைச் சுகமாக்கினார், அவருடைய கீர்த்தி எங்கும் பரவியது. இப்பொழுது, அவர் தேவ குமாரன் என்றும், தெய்வீக சுகமளிப்பவர் என்றும் ஜனங்கள் விசுவாசிக்காமல் அவரைக் குறித்து சந்தேகித்திருந்தால், அவர்கள் சுகமடைந்திருக்க முடியாது. அவர் அவர்களுக்காக ஜெபித்திருந்தால் கூட, அவருடைய ஜெபமானது அவர்களை சுகப்படுத்தியிருக்காது. அவருடைய கரங்களை அவர்கள் மேல் வைத்திருந்தால் கூட அது அவர்களை சுகப்படுத்தி இருக்காது. இயேசு யாரையாவது சுகப்படுத்தினதிற்காக ஒருபோதும் மேன்மையை எடுத்துக் கொண்டது கிடையாது. அவர், 'உன் விசுவாசம் உன்னை சுகப்படுத்தினது' என்றார். அது சரியா? 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.'
ஒருமுறை ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். பிறகு, ஒவ்வொருவரும் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட விரும்பினர். கூட்டங்களில் நீங்கள் கவனியுங்கள், ஜனங்கள் இவ்வாறு கூறுவதை நீங்கள் கேட்பீர்கள்... நான் அவைகளைக் கேட்டிருக்கிறேன். நான் ஊக்குவித்தலின் கீழ் ஒருவேளை யாரோ ஒருவரிடம், 'இந்தத் தெருவுக்குப் போ, அல்லது உன்னுடைய ஊன்றுக் கட்டைகளை எறிந்து விட்டு, அந்த மூலைக்குப் போ' என்று கூறுவேன். பிறகு அடுத்த நபர் அந்த வழியாக வந்து, 'சகோதரன் பிரன்ஹாமே, நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் சொல்லும்' என்று கூறுகின்றனர். பாருங்கள்? வேறு யாரோ ஒருவர் செய்து கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களும் அப்படியே அதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
நல்லது, நண்பர்களே, இப்பொழுது இங்குள்ள யாரோ ஒருவர் எழும்பி, கிறிஸ்துவை விசுவாசத்தால் தொடக் கூடுமானால், உங்களில் மீதியுள்ளவர்களும் அதைப் பார்த்து அவ்விதமே செய்ய முடியும்.
19இங்கே அன்றொரு நாள் இரவில்... நான் இந்த விவரணத்தை சொல்லியாக வேண்டும். அது கடந்த வாரத்தில் சம்பவித்தது. நாங்கள் அப்போது மியாமியில் இருந்தோம். அது உண்மையிலேயே ஒரு குழப்பமான பட்டணம் ஆகும். உலகத்தைச் சுற்றிலுமிருந்து அங்கு வரும் எல்லா வகையான உபதேசங்களையும் மற்றும் ஒவ்வொன்றையும் அது கொண்டுள்ளது. எல்லாவிடங்களிலும்... மேலும்... நான் உள்ளே வந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஜனங்கள் கூட்டத்திற்கு வர மாட்டார் கள் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் - அவர் கள் வந்தார்கள்; அவர்கள் ஆயிரக்கணக்கில் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
ஆனால் அங்கே தான் அது சம்பவித்தது. ஒரு நாள் இரவு, ஆராதனையின் போது, நாங்கள் துரிதமாக அதை செய்ய வேண்டியிருந்தது, ஏனெனில் ஜெபவரிசையில் வருவதற்கு அநேக நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். முதலாவது நாங்கள் ஒரு சில செவிடர்களையும், ஊமையானவர்களையும் கொண்டு வந்தோம், ஒருவேளை ஒரு குருடான மனிதன் என்று நம்புகிறேன், சம்பவித்திருந்த அதைப்போன்ற ஒரு சில காரியங்கள். அது கடந்த இரவின் போது சம்பவித்தது. பிறவிக் குருடர்களாயிருந்த இரண்டு பையன்கள் அங்கிருந்தனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாதவர்களாய் இருந்து, தங்கள் பார்வையைப் பெற்றுக் கொண்டனர்; மேலும் அதைப் போன்ற வெவ்வேறான காரியங்கள்.
எங்களுக்குக் கடினமான போராட்டம் உண்டாயிருந்தது, ஏனெனில் அங்கே சபைகளுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒரு குழப்பம் இருந்தது; ஏனெனில் அநேக ஜனங்கள் அவ்விடங்களுக்கு வந்து, அந்த சபைகளை உடைத்துப் போட்டனர், நீங்கள் பாருங்கள்; அவர்கள் சென்று தங்களுக்கு சொந்த சபையை தொடங்கி விடுவர். நாங்கள் ஜனங்களிடம் சென்று, நாங்கள் ஒரு சபையைத் தொடங்க விரும்பவில்லை; நாங்கள் சபைகளை ஒன்று சேர்க்க எங்களால் முடிந்த சிறந்ததை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறவும் கடினமாயிருந்தது. அதுதான் நமக்குத் தேவையானது. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நாம் ஒன்றாக கூடி ஒத்துழைப்பு கொடுப்பது அவசியமாகிறது.
20அதன் பிறகு, அதைப்போன்று வந்து கொண்டிருந்த ஜனங்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்தேன். முதலாவதாக, நான்... இப்பொழுது யாரோ ஒருவருடைய விசுவாசமானது ஜெப வரிசையில் வரத் தொடங்கியிருந்தது; உங்களால் அதை உணர முடியும். அந்த ஒரு காரியம் தான், நான்... (ஒலிநாடவில் காலியிடம் - ஆசிரியர்.)
எப்போதும் வாஞ்சையுள்ளவர்கள்... ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜனங்களாகிய நீங்கள் தாழ்மையுள்ளவர்களாய் இருந்து, அப்பத் துணிக்கையை எடுத்து அதைப் புசிக்க வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். என்னவாயினும் நீங்கள்... நீங்கள் அந்த மனப்பான்மையைக் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அதன் காரணமாகத் தான் நீங்கள் சுகமடைகிறீர்கள், ஏனெனில் நீங்கள் தாழ்மையாக வருகிறீர்கள். வணங்கா கழுத்துள்ள யாராவது வருவார்களானால், அவர்கள் ஒருபோதும் தேவனிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு தாழ்மையுள்ளவர்களாக ஆக வேண்டும், அப்பொழுது கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார் (அது சரியே.), அல்லது அவர் உங்களை இரட்சிப்பார். உங்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுவார், நீங்கள்...
இப்பொழுது... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) நீங்கள் அவருக்குக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறீர்கள், அவர் உங்களுக்கு கடமைப்பட்டவரல்ல. அப்படியானால் நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள்.
21அதன்பிறகு நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், என் முதுகை கூட்டத்தினர் பக்கமாக காட்டிக்கொண்டு நின்றிருந்தேன். அங்கே அநேக நூற்றுக்கணக்கான ஜனங்கள் இருந்தனர். நான் இவ்விதமாக ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஜனங்கள் ஜெப வரிசையினூடாக வந்து கொண்டிருந்தனர். திடீரென நான் ஒரு நபரை நிறுத்தினேன், ஏனெனில் அப்போது சுகமாக்கப்படுவதற்கான விசுவாசத்தை அவர்கள் கொண்டிருக்காதது போன்று காணப்பட்டது.
நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது, நான் ஏதோ வொன்றை உணர்ந்தேன். நான் சுற்றிலும் திரும்பி, 'இங்கேயிருக்கும் ஒரு முடமான நபர் சுகமடைந்து விட்டார், ஏனெனில் நான் அதை உணர்ந்தேன்' என்றேன். சிறிது நேரத்தில், நான், 'ஏதோவொரு முடமான நபர்...' என்றேன்.
அங்கே பின்னால் இருந்து யாரோ ஒருவர் கூச்சலிடும் சத்தத்தை நான் கேட்டேன். அந்த பட்டணத்திலுள்ள ஒரு வாலிப வியாபாரி தன்னுடைய மனைவியுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு முடமான கை இருந்தது. அவர் அங்கே தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதன் பிறகு, அவர் அங்கே உட்கார்ந்திருந்ததாக எங்களிடம் கூறினார். அவர், 'நான் ஆராதனையில் கலந்து கொள்ள விரும்பினேன். நான் இரண்டு அல்லது மூன்று இரவுகள் அங்கே இருந்தேன்' என்றார். ஆனால், 'அந்த ஜனங்களின் மத்தியில் என்னால் செல்ல முடியவில்லை. அவர்களில் அநேகர் மிகவும் தேவையுள்ளவர்களாக அங்கிருந்தனர். நான், 'ஓ, தேவனே, அது உம்முடைய வரமாக இருக்குமானால், நீர் என்னை சுகப்படுத்தும்' என்று ஜெபித்தேன்' என்றார். அந்த கண நேரத்தில் அவருடைய விசுவாசமானது குறிப்பிட்ட நிலையை அடைந்தது (நீங்கள் பாருங்கள்?), என்னுடைய முதுகானது அவர் பக்கமாகத் திரும்பியிருந்து, அது அசைவதை நான் உணர்ந்தேன். நான்... அதன் பிறகு அவர் எழுந்தார்.
22நண்பர்களே, இப்பொழுது, அது நானல்ல. ஆனால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார் என்பதை அது நிரூபிக்கிறது. அவர் சுற்றிலும் திரும்பி, 'என்னைத் தொட்டது யார்?' என்று கேட்டார். அது சரியா, சகோதரன் பாஸ்வர்த்?
இப்பொழுது, இந்தக் காரியங்கள், இங்கே ஒரு கூட்டத்தில் நடந்தது... ஒரு நாள் இரவு நான் அங்கே நின்று கொண்டிருந்தேன், மூச்சுத் திணறல் உண்டாக்கும் ஒரு ஆவி என்னைக் கடந்து செல்வதை நான் அறிந்தேன். அது மீண்டும் திரும்பி வருவதை நான் உணர்ந்தேன். சிறிது நேரத்தில், அது கீல் ஆடிட்டோரியத்தில் சம்பவித்தது. அவ்விரவு பதினான்காயிரம் பேர் அங்கு உள்ளே கூடியிருந்தனர். நான், 'களகண்ட மாலை என்னும் குரல்வளை சுரப்பி வீக்கம் கொண்ட யாரோ ஒருவர் சுகமடைந்தார், அந்த ஆவி இப்போது தான் இங்கேயிருந்து கடந்து சென்றது' என்றேன். மேலும் நான், 'வெளிப்படையாக, இங்கே அது மீண்டும் வருகிறது' என்றேன். மேலும் அது... அது கடந்து செல்கையில், மூச்சுத் திணறச் செய்வதை நான் கேட்கிறேன்; ஒருவேளை உங்களில் யாரோ ஒருவர் மூச்சுத்திணறி, பெரும்பாலும் மரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது...
23(ஜனங்களால்) சொல்லப்பட்ட அநேக காரியங்கள் உண்மை யல்ல என்று நான் அறிவேன். ஆனால் உண்மையான தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் சுகமளிக்கிறார். அது சரியே. அது சென்ற போது, நான் ஒரு... மீண்டும் அதைக் குறித்து அறிவிப்பு செய்தேன். நான், 'யாரோ ஒருவர்... வரிசையினூடாகப் பாருங்கள். யாரோ ஒருவர் களகண்ட மாலை நோயிலிருந்து (goiter) சுகமாக்கப்பட்டார்' என்றேன். இரண்டாவது மாடி முகப்பில், யாரோ ஒருவர் கூச்சலிடுவதை நான் கேட்டேன். 'சகோதரன் பிரன்ஹாம், அது நான் தான்' என்றார் அவர்.
அவர் செய்தித்தாளின் செய்திகளை அஞ்சல் மூலமாக விரைவாக அனுப்பும் பத்திரிகை நிருபர். அனேக வருடங்களாக அவருக்கிருந்த உட்புற களகண்ட மாலை நோய் அவரை விட்டுப் போய் விட்டது. அவர், 'தேவனுடைய வல்லமை யானது அங்கே சுற்றிலும் முழுவதுமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது' என்றார். பாருங்கள்?
அவருடைய விசுவாசமானது... அவர் குற்றம் கண்டு பிடிப்பதற்கு அங்கே வந்திருந்தார். அவர் செய்தித்தாளில் பிரசுரிப்பதற்காக எழுதியிருந்த தாளின் முழு பக்க செய்தி மற்றும் ஒவ்வொன்றையும் அடுத்த நாள் எங்களிடம் கொடுத்தார். அவர் குற்றம் கண்டுபிடிக்க வந்திருந்தார். ஆனால் அவர் தேவன் கிரியை செய்து கொண்டிருப்பதையும் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்க ஆரம்பித்த போது, அவர் தாமே விசுவாசித்தார். அவர் அவ்வாறு செய்த போது, தேவன் அவருக்கு பலனளித்தார். மேலும் அவர் ஒருபோதும் ஜெப வரிசையில் கூட வர வேண்டியிருக்கவில்லை. அவர் இரண்டாவது மாடி முகப்பில் இருக்கும் போதே சுகமாக்கப்பட்டார். ஓ, என்னே.
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்க வில்லையா என்று என்னிடம் கூறுங்கள். அவருடைய வல்லமையானது மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இச்சமயத்தில் கூட அவர் அதே கிரியைகளைச் செய்ய முடியும்.
24இப்பொழுது, கவனியுங்கள். இங்கிருக்கும் நாம் அனைவருமே சுகமடைய வேண்டுமென்று தான் விரும்புகிறோம். நீங்கள் இதற்குள் மிக ஆழமாகச் செல்லும்போது, நீங்கள் நலமாகவே இருக்கப் போகிறீர்கள். நீங்கள் அதைக் குறித்து குறிக்கோள் இல்லாமல் வர வேண்டாம். ஒரு உத்தமமான இருதயத்துடன் வந்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, நான் ஜெபிக்கையில் உங்களது சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பாருங்கள்? அந்த வழியில் தான் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இப்பொழுது, அதை அரைகுறையாக விசுவாசித்துக் கொண்டு வர வேண்டாம்.
இப்பொழுது, நான் இங்கேயிருக்கிறேன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் உரிமை கோருகிற துடிப்புகளைப் (vibrations) பற்றியும், இந்த காரியங்களைக் குறித்தும்...
என்னுடைய மற்ற கூட்டங்களில் செவிடர்களும், ஊமையர் களும், குருடர்களும், முடவர்களும், மற்றவர்களும் சுகமடைந்ததைக் கண்ட எத்தனை பேர் இந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். ஜனங்களுடைய வியாதிகளைக் குறித்து சொல்லப்பட்டதையும், அவர்களுடைய பாவங்களையும் மற்றவைகளைக் குறித்தும் சொல்லப்பட்டதையும், துடிப்புகளைக் குறித்தும்... உங்களில் எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? நல்லது, எத்தனை பேர் அதை கண்டிருக்கிறீர்கள்? ஓ, பாருங்கள்?
இப்பொழுது, இந்த வாக்குமூலங்களை நான் அறிவித்து, அவர்கள் - அவைகளை நான் எனக்கு நானே அறிவித்து, அது எதுவும் சம்பவிக்கவில்லையென்றால், அப்போது அதை விசுவாசிக்க வேண்டாம், ஏனெனில் என்னுடைய வார்த்தைகள் உண்மையில்லாததாக இருக்கலாம். ஆனால் நான் அந்த வாக்குமூலங்களை அறிவித்திருந்தாலும், அவைகள் மெய்யென்று தேவன் நிரூபிப்பாரானால், அது அதைக் குறித்து தேவனுடைய சாட்சியாயிருக்கும். அது சரியா? அது உண்மையென்று கூறுகிற தேவனுடைய சாட்சியாயிருக்கும். நல்லது இப்பொழுது, அது உண்மையென்று தேவன் கூறி, அடையாளங்களும் அற்புதங்களும் அதைப் பின்தொடர்ந்து, வார்த்தையை உறுதிப்படுத்து வாரானால், அதற்காகத்தானே நீங்கள் வருடக்கணக்காக ஜெபித்தீர்கள், இல்லையா?
25நல்லது, என்னே, என்னே. நாம் சரியாக இப்பொழுதே சுகமாக்கப்பட முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக. என்னே, அந்த வரவேற்கும் ஆவி பின்னாலிருந்து இவ்விதமாக வருவதை நான் உணர விரும்புகிறேன். அது - அது அற்புதமாக உணரச் செய்கிறது. சரி. இப்பொழுது, வார்த்தையில் சிலவற்றை வாசிக்கலாம். இப்பொழுது, இராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் சுகமாக்கப்படுவதைப் பற்றியதாக இது இருக்கிறது. இப்பொழுது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்போவதில்லை, சிறிது நேரமே அதை எடுத்துக் கொண்டு, பின்பு சரியாக சுகமளிக்கும் ஆராதனைக்குச் செல்லலாம்.
(யோவான் 4:46)
பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்ச ரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே (இந்த) ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன்...
(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)
நான் சிறிது நேரத்திற்கு முன்பதாக பேசிய பிரகாரம், அல்லது ஏதோவொன்று. அவரா? சரி. நான் வேறு யாரோ ஒருவருடைய பாடத்தை எடுத்துக்கொண்டேனா என்று சற்றே வியப்படைகிறேன்.
எது எப்படியானாலும், இப்பொழுது, அவர் ஒரு அற்புதத்தை செய்திருந்த இடமாகிய கலிலேயாவிற்கு திரும்பி வந்திருந்தார். இப்பொழுது, அவர் மீண்டும் திரும்பி வந்திருந்தார். கானாவூர் கலியாண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அந்த அற்புதத்தை அவர் செய்திருந்தார். நிச்சயமாகவே.
அவர் சற்றே ஒரு வாலிப மனிதனாக இருந்தார். அவர் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து வந்திருந்தார்.
26இன்று, இயேசு ஒருவேளை இந்த உலகத்தைக் குறித்து நினைத்திருக்காவிட்டால், அவர் இதுவரைக்கும் இந்த உலகத்தில் வந்திராமல் இருந்து, இன்றைக்கு ஒருவேளை காட்சியில் வந்திருந்தால், அநேகமாக அவர்கள் அதை ஒருகூட்ட மத வெறியாக மாற்றி விட்டிருப்பார்கள். அது சரியா? இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். அங்கே அநேகம் அநேகமான நூற்றுக் கணக்கான இயேசுக்கள் இருந்தனர்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)...?... நம்மிடமிருந்து கடந்து சென்ற.
சரி. அதற்குப் பிறகு சிறிது கழிந்து, அந்த சீமாட்டி இரண்டு அல்லது மூன்று பேர்களுக்கு தன்னுடைய இடத்தைக் கொடுத்தாள். பிறகு சிறிது கழித்து, (ஜெப) வரிசையானது ஆராதனையின் கடைசி வரை நீடித்தது, அதற்கு மேலும் ஒரு அற்புதமும் நடக்கவில்லை, அது துரிதமான வரிசையாயிருந்தது. அவள் பெருந்திரளான ஜனங்களைக் கண்ட போது, அவளுக்கு அங்கு வர போதுமான மனதில்லை. அவர்களில் மீதியுள்ளவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய காலில் முடமாயிருந்தாள். அவள், 'கர்த்தாவே, அந்த நூற்றியிருபது பவுண்டு எடையுள்ள அம்மனிதன் ஜனங்களை சுகமாக்க முடியவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உம்முடைய தூதன் அங்கிருக்கிறார் என்பதை நானறிவேன். ஏனெனில் உம்முடைய வார்த்தைகள் உறுதிப்படுத்தப்பட்டன' என்றாள். மேலும், 'இப்பொழுது அது நீர்தான் என்று நான் விசுவாசிக்கிறேன்' என்றாள். அவளுடைய கால் நேராகி விட்டது. அவள் எழுந்து, 'சகோதரன் பிரன்ஹாமே, இனிமேலும் என்னுடைய ஊன்றுக்கட்டைகள் எனக்கு அவசியமில்லை' என்றாள். அதை கீழே வைத்து விட்டு வேறு யாரையும் போல எவ்வளவு நன்றாக நடக்க முடியுமோ அவ்வளவு நன்றாக நடந்தாள்.
ஏன்? அவள் வாஞ்சித்தாள்; அவள் தாழ்மையாக இருந்தாள்; அவள் காத்திருக்க விருப்பமுடையவளாய் இருந்தாள்; அவள் எதையும் செய்வதற்கு வாஞ்சையுள்ளவளாக இருந்தாள். அதைத் தான் தேவன் கனம் பண்ணுகிறார் (அது சரியா?): மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுத்தல். அது சரியே.
27இப்பொழுது, இம்மனிதர் இங்கே வருகிறார். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவராக இருந்தார் என்று அவரைக் கவனியுங்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) ...?... அவனிடம்.
இப்பொழுது, இயேசு அவனைக் கடிந்து கொண்டார். அவர், 'ஓ, நல்லது...' என்றார். மேலும்;
நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள்.
நாம் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலாவது விசுவாசிப்போமா என்று ஊகிக்கிறோம். அது சரியா? ஆனால்... இப்பொழுது, கவனியுங்கள். அவர் அவனை அங்கே சோதித்துப் பார்த்தார்.
அதற்கு இராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வர வேண்டும் என்றான்.
என்னே. என்ன ஒரு விசுவாசம்! உங்களுடைய மகன் மரித்துக் கொண்டிருந்து, நீங்கள் அந்த வியாதிக்காக ஜெபிக்கும் படி அந்த மனிதனைக் காண வெளியே புறப்பட்டு வரும்போது, அந்த மனிதன், 'நல்லது, நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்க மாட்டீர்கள்' என்று அவனிடம் கூறுவதை கற்பனை செய்ய முடிகிறதா?
இப்பொழுது, அவன் எவ்வளவாக தன்னைத் தாழ்த்தினான் என்பதைக் கவனியுங்கள். அவன், 'ஆனால், ஐயா, நீர் வர வேண்டும் அல்லது என்னுடைய பிள்ளை மரித்து விடுவான்' என்றான்.
இப்பொழுது, இயேசு என்ன கூறினார் எனபதைக் கவனியுங்கள். இப்பொழுது, அவர் அவனுடன் போகவில்லை. ஆனால் அவர் அவனுடைய விசுவாசத்தைக் கண்டார். அவர் அவனுடைய தாழ்மையைக் கண்டார். அந்த மனிதன் தான் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்தான் என்பதை அவர் கண்டு கொண்டார். இயேசு அவனிடம், 'நீ போகலாம்; உன் குமாரன் பிழைத்திருக்கிறான்' என்றார். (ஓ, என்னே. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்.) 'நீ போகலாம்; உன் குமாரன் பிழத்திருக்கிறான்.' அந்த மனிதன் வி-சு-வா-சி-த்-தா-ன். அவன் விசுவாசித்தான். இப்பொழுது, அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று அந்தப் பிள்ளைக்காக ஜெபிக்கும் படியாக, அவன் அவரிடமாக வருகிறான். ஆனால் இயேசு அங்கு போகவில்லை. 'உன்னுடைய குமாரன் பிழைத்திருக்கிறான்' என்று அவர் சொன்னார். அம்மனிதன் அதை விசுவாசித்தான்.
இப்பொழுது, அது... இப்பொழுது கதையின் மீதிப் பாகத்தையும் கவனியுங்கள்.
அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். (இப்பொழுது இதைக் கவனியுங்கள். ஓ, என்னே. நான் இதை விரும்புகிறேன்.)
அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்கு குணமுண் டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.
உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் (அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள், அது ஒன்றாக இணைக்கும் போது. சரி.) அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பி வந்த பின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.
28கவனியுங்கள். இப்பொழுது, அவனுடைய மகனுக்காக ஜெபிக்கும்படிக்கு இயேசு போக வேண்டுமென்று அவன் விரும்பினான், அவரோ போகவில்லை. ஆனால் அவர், 'உன் குமாரன் பிழைத்திருக்கிறான்' என்றார், அந்த மனிதனும் அதை விசுவாசித்தான். இப்பொழுது, அம்மனிதன் அதை விசுவாசிக்காமல் இருந்திருந்தால், அது அவ்வாறு சம்பவித்திருக்காது. ஆனால் அவனிடம் போதுமான விசுவாசம் உள்ளதா என்பதை இயேசு அறியும்படி ஏற்கனவே அவனிடம் அதைக் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.
கூட்டத்தில் ஜெப வரிசையானது கடந்து செல்லும் போது, திடீரென நீங்கள், விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரை உங்களில் அனேகர் கவனித்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த நபரை சிறிது நேரம் நிறுத்தி, அந்த விசுவாசமானது போதுமான அளவுக்கு தூண்டப்படும் போது, அது பற்றிக் கொள்கிறது. பாருங்கள், உங்களால் அவர்களை விசுவாசிக்க செய்யக் கூடுமானால்.
இப்பொழுது,... தேவன் எப்பொழுதாவது செய்யும்படியான கடினமான காரியம் என்னவெனில், சாவுக்கேதுவான ஒருவரை மற்றொன்றைக் குறித்து விசுவாசிக்கச் செய்தலாகும். என்னிடம் பேசிய தூதனானவர் இன்றிரவு இங்கே பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு இதை உங்களுக்கு சொல்வாரானால், அதை விசுவாசிப்பது உங்களுக்கு இலகுவாயிருக்கும், ஏன், நீங்கள் அவரிடம் ஓடிச் சென்று அவரைத் தொழுது கொள்வீர்கள். நீங்கள் அவருடைய காலில் விழுந்து வணங்க விரும்புவீர்கள். அவர் வருகிற போது நான் அவரைக் காணும் விதமாக அவர் இங்கே நின்று கொண்டு கவனித்துக் கொண்டிருந்தார்: மகத்தான கண்டிப்பான மனிதராக அங்கே நின்று கொண்டிருந்தார். நான் அதை எவ்வாறு உணர்கிறேன் என்பதை நான் அறிவேன்.
29ஆனால் நண்பர்களே, நான் ஊழியக்களத்திற்கு வந்து இருபத்தொன்று மாதங்கள் ஆகின்றன. இவ்வளவு நாட்களிலும் ஆயிரக்கணக்கான அற்புதங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, அவை களில் எந்த அற்புதத்தையும் நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் செய்தது கிடையாது. அவைகளில் ஒரு அற்புதத்தையும் நான் நடப்பித்தது கிடையாது. அதைச் செய்வது அவர் தான். பாருங்கள்? அவர் தான் அதைச் செய்கிறார். அதனுடன் செய்வதற்கு எனக்கு எதுவும் கிடையாது. அது அவரே. நான் அவருக்கு வெறும் வாயாக இருக்கிறேன். அவர் சொல்வதையே நானும் பேசுகிறேன். ஜனங்களுக்கு விசுவாசம் உள்ளதா, விசுவாசம் இல்லையா என்று எனக்கு எப்படித் தெரியும்? நீங்கள் பத்து வருடங்களுக்கு முன்னரோ அல்லது இருபது வருடங்களுக்கு முன்னரோ என்ன செய்தீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்? எனக்கு அது தெரியாது. அது தேவனே.
எனவே வேதாகமத்தின் காரியங்கள் திரும்பவும் சம்பவித்து, வார்த்தை நிறைவேறும் வேளையானது வந்திருக்கிறது. இப்பொழுது, தேவன் முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்பப்போவதாக வாக்குப் பண்ணியிருக்கிறார். முன்மாரியையும் பின்மாரியையும் பின்மாரி காலத்தின் நேரத்தில் ஊற்றப் போவதாக அவர் வாக்குப் பண்ணியிருக்கிறார். வேறு வார்த்தையில் சொல்வோமானால் இரண்டு மடங்காக ஊற்றப் போகிறார். எலிசாவின் சால்வையைப் போல. எலியா அதை எறிந்த போது, எலிசா அதை எடுத்துக் கொண்டான். அவனுக்கு இரட்டிப்பான ஆவியின் வரம் இருந்தது. சபைக்கும் கிறிஸ்துவுக்கும் அவன் மாதிரியாக இருந்தான். கிறிஸ்து எடுத்துக் கொள்ளப்பட்டார். கிறிஸ்துவிலிருந்த அதே ஆவி இன்றிரவு சபையின் மேல் உள்ளது, அதே பரிசுத்த ஆவி. பாருங்கள்? 'உன்னை விட்டு நான் எடுத்துக் கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்' என்றான் எலியா. அவன் அந்த சால்வையை எடுத்துக் கொண்டான். இப்பொழுது... யோர்தானை அடித்து, 'எலியாவின் தேவன் பேசட்டும்' என்றான்.
30இப்பொழுது, கவனியுங்கள். இன்றிரவு சபையானது, நாம் கிறிஸ்துவின் மேல் நம்முடைய கண்களை வைத்திருக்க வேண்டும். அவர் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நூற்றியிருபது பேர் தங்களுடைய கண்களை அவர் மேல் வைத்திருந்தனர். அவர்கள் மேலறைக்குள் சென்றனர். நீங்கள், 'கிறிஸ்துவின் மேல் அதே ஆவியானவர் தான் இருந்தாரா?' என கேட்கலாம்.
ஒரு நாள், ஸ்திரீ ஒருத்தி, 'என்னுடைய குமாரர்கள் உம்முடைய இராஜ்யத்தில் ஒருவன் உமக்கு வலது பாரிசத்திலும், ஒருவன் உமக்கு இடது பாரிசத்திலும் உட்காரும்படி அருள் செய்ய வேண்டும்' என்றாள்.
அவரோ, 'நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக் கூடுமோ? உபத்திரவங்களையும் மற்றவைகளையும் அனுபவிக்க உங்களால் கூடுமோ?' என்று கேட்டார்.
'கூடும்' என்றார்கள்.
'நான் பெறும் ஸ்நானத்தை உங்களால் பெறக் கூடுமா?' என்றார். அவள், 'கூடும்' என்றாள். அவளால் கூடும் என்று ஒப்புக்கொண்டாள். அந்த ஸ்நானமானது பரிசுத்த ஆவியாக இருக்கிறது. பிறகு, அவர் அவர்களை நோக்கி, 'ஆம், ஆனால் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல' என்றார். ஆனால் கவனியுங்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
31ஞாபகம் கொள்ளுங்கள்... சிறிது நேரத்திற்கு முன், நான் டாக்டர். பாஸ்வர்த் அவர்களிடம் பரிசுத்த யோவான் 5:19 ஐக் குறித்து பேசின படியே, அவர் அங்கே சொன்னார்... அவர் (பெதஸ்தா - மொழிபெயர்ப்பாளர்) குளத்தருகே அம்மனிதனை சுகமாக்கி விட்டு, அவர் அங்கிருந்து சென்று, யூதர்கள் அவரை சோதித்த போது, அவர் அவர்களை நோக்கி, 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன் றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்' என்றார். பாருங்கள்?
இப்பொழுது, கவனியுங்கள். அவர் குளத்தருகே கடந்து சென்ற போது, அங்கே ஏறக்குறைய பத்தாயிரம் ஜனங்கள் படுத்திருந்தனர். இப்பொழுது, 'திரளான ஜனங்கள்' என்று வேதாகமம் கூறுகிறது, அதன் அர்த்தம் என்னவெனில், 'அநேக ஜனங்கள்' என்பது தான், இல்லையா? முடமானவர்கள், குருடர், சப்பாணிகள் மற்றும் எல்லா வகைப்பட்ட ஜனங்களுமாக ஒருவேளை பத்தாயிரம் ஜனங்கள் அங்கே படுத்திருக்கலாம்: செவிடர்கள், ஊமையர்கள், பித்து பிடித்தவர்கள். இருபத்தெட்டு வருஷமாய் (முப்பத்தெட்டு வருஷமாய் - தமிழாக்கியோன்.) வியாதி கொண்டிருந்த ஒரு மனுஷனிடத்திற்கு அவர் போனார். அவர் அவனை நோக்கி, 'ஐயா, சொஸ்தமாக வேண்டுமென்று நீர் விரும்புகிறீரா?' என்று கேட்டார்.
அவன், 'என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளே...' என்றான். பாருங்கள், அவனால் நடக்க முடிந்தது. 'நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்' என்றான்.
இயேசு அவனை நோக்கி, 'உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குப் போ' என்று சொன்னார். இப்பொழுது, அந்த மனிதன் அவரிடம் ஒருபோதும் கேள்விகேட்கவில்லை. அவன் அப்படியே கீழ்ப்படிந்தான். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் நல்லது. அது சரியா?
அவர், 'நல்லது, அதை என்னிடம் சொல்வதற்கு நீர் யார்?' என்று ஒருபோதும் கேட்கவில்லை. அவன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டதோ அவன் அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து, தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு போனான்...
32இப்பொழுது, அவர் ஏதோ ஒரு குருடனிடமோ, முடமானவனிடமோ, சப்பாணியிடமோ ஏன் போகவில்லை? ஏனெனில்... இப்பொழுது அவர் அவர்களிடம் போகவில்லை... அவன் மற்ற மனிதர்களிடமிருந்து எந்த வித வித்தியாசமாகவும் காணப்படவில்லை. மற்ற மனிதர்களைக் காட்டிலும் அவன் எந்த விதத்திலும் வித்தியாசமாக உடையுடுத்தியிருக்கவில்லை. இப்பொழுது, அது... யாராவது ஒருவர். நீங்கள்... நீங்கள்... ஊழியக்காரர்களும் மற்றவர்களும் தாங்கள் விரும்புகிற எவ்விதத்திலும் உடையுடுத்திக்கொள்ள முடியும்.
சில நாட்களுக்கு முன்னால், யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார்... உங்களில் அநேகர் அபைக்கைக் (Abaick) குறித்து கேள்விப்பட்டுள்ளீர்கள். அவர்கள் அச்சமயத்தில் இங்கே வந்திருந்தனர் என்று உங்களுக்குத் தெரியும். நல்லது, நாங்கள் சிறிது காலமாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் சில நாட்களுக்கு முன்னால் ஃபுளோரிடாவில் சந்தித்து, ஒன்றாக படமெடுத்துக் கொண்டோம், '...?... அமெரிக்க ...?... தெய்வீக சுகமளித்தலைக் குறித்து கலந்து பேசினார்கள்' என்றார்.
33எப்படியானாலும், இந்த நபர், அவர் - அவர் - அவர் நீண்ட தாடியும் நீண்ட மயிரும் கொண்ட ஒரு மனிதராக இருந்தார். எனவே அதுதான் அவருடைய சொந்த கருத்து. அது - அது மிகவும் சரியே. நீங்கள் அவ்விதமாக உடையுடுத்தியோ அல்லது அவ்விதமாகவோ இருக்க விரும்பினால், அது சரி தான். ஆனால் அது உங்களை 'ஆம்' என்றோ அல்லது 'இல்லை' என்றோ சொல்ல வைக்காது. நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தேவனுக்கு முன்பாக உங்களுடைய இருதயத்தின் நிலையைப் பொறுத்தது. அது சரியே.
இப்பொழுது, அவர் கடந்து செல்கையில், அவர் இயேசுவாக இருந்தார்; அவர் சாதாரணமாக உடையுடுத்திய மனிதனாக இருந்தார். அவர் ஜனக்கூட்டத்தினூடாகச் சென்று அந்த மனிதனைக் கண்டார், அந்த மனிதன் பார்ப்பதற்கு தனிச்சிறப்பு வாய்ந்த மனிதனல்ல. அவர் அவனை நோக்கி, 'நீ சொஸ்தமாக விரும்புகிறாயா?' என்றார்.
அவன், 'என்னை குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை' என்றான்.
'உன்னுடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நட' என்றார். அவன் அவ்வாறே நடந்தான்.
பிறகு, அவர்கள் அவரிடம் கேள்வி கேட்ட போது, பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார் என்றார்.
34இப்பொழுது, இங்கே அவர் மீண்டும் கானாவூருக்கு வருகிறார், ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். இப்பொழுது, 47-வது வசனத்தைக் கவனியுங்கள்:
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும் படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான். (யோவான் 4:47)
இப்பொழுது, கவனியுங்கள். 'அவன் கேள்விப்பட்டபோது...' அந்த 3-வது - 3-வது வசனத்தைக் கவனியுங்கள், அது 47-வது வசனத்தில் உள்ளது. 'இயேசு அந்த தேசத்திற்கு திரும்பி வந்தார் என்று அவன் கேள்விப்பட்டபோது,' அவர் அங்கே ஒரு அற்புதத்தைச் செய்திருந்தார், 'மரணத்திற்கு சமீபமாய் இருந்த அவனுடைய மகனுக்காக, அவன் அவரிடம் வந்தான்.'
அதை பெற்றுக்கொண்டீர்களா? அவரால் அதைச் செய்ய முடிந்தது என்று அவன் அறிந்திருந்தான். அவர் ஏற்கனவே அங்கே ஒரு அற்புதத்தைச் செய்திருந்தார். நல்லது, அவர் ஒரு அற்புதத்தைச் செய்திருப்பாரானால், அவருடைய வார்த்தையானது தன்னுடைய குமாரனை சுகமாக்கும் என்று அந்த ராஜாவின் மனுஷன் விசுவாசிக்க அது காரணமாயிற்று. அப்படியானால், அவர் இங்கே நூற்றுக்கணக்கான அற்புதங்களை நமக்கு முன்பாக செய்வார் என்று நம்மால் ஏன் விசுவாசிக்க முடியாது? நான் என்ன பொருளில் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?
கவனியுங்கள். இந்தக் காலையில் அந்த ஸ்திரீ கடந்த போன போது எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்?... திருமதி. ஹாட்டி வால்டிராப், பார்க்கும்படிக்கு இங்கே... அந்த சீமாட்டி இங்கே இருக்கிறார்களா?... இன்றிரவு திருமதி.ஹாட்டி இங்கிருக்கிறார் களா? திருமதி. வால்டிராப்? நல்லது, அவள் சரியாக இங்கே இருக்கிறாள். இருதயத்திலும், பெருங்குடலிலும், நுரையீரலிலும் இருந்த புற்று நோய் போய் விட்டது... அவள் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள், இல்லையா? என்னே, மிக்க அளவில், இல்லையா, சகோதரியே. நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அவளுடைய மருத்துவருடைய X-Ray படங்களும் மற்றவை களும் இங்குள்ளன.
35இப்பொழுது, புற்று நோயால் மரிக்கும் தருவாயில் படுத்திருந்து, இன்றிரவு ஜீவித்துக் கொண்டிருக்கும் அந்த சீமாட்டி இருக்கிற அதே பட்டணத்தில் இன்றிரவு நாம் திரும்பி வந்திருக்கிறோம். இது இரண்டாம் அற்புதமாகும். பாருங்கள்? ஓ, என்னே, இரண்டாவது அற்புதம். செய்யப்பட்ட டஜன் கணக்கிலான அற்பதங்களில் இதுவும் ஒன்று. அது சரியா?
இப்பொழுது, கவனியுங்கள். அந்த ராஜாவின் மனுஷன் தன்னுடைய குமாரனைக் கொண்டு வந்தான், அவன்... இங்கே, அவனால் தன்னுடைய குமாரனைக் கொண்டு வர முடிய வில்லை. ஆனால் அவன் அப்படியே அவரிடம் வருகிறான். அவன், 'இப்பொழுது, என்னுடைய குமாரனுக்காக ஜெபிக்கும் படி நீர் வர வேண்டும்' என்றான். இப்பொழுது, கவனியுங்கள். அவன்... விசுவாசமானது கேள்வியினால் வருகிறது. அவர் அந்த அற்புதத்தைச் செய்தார் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான்.
இப்பொழுது, இங்கே சென்ற கூட்டத்தின் போது, இயேசு சுகமாக்கினார் என்பதை எத்தனை பேர் கேள்விப்பட்டுள்ளீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். அவர் இங்கே சென்ற கூட்டத்தின் போது சுகமளித்தார் என்று எத்தனை பேர் அறிவீர்கள். இப்பொழுது, இங்கே அதைக்குறித்த சாட்சி உள்ளது. சென்ற கூட்டத்தின் போது இங்கேயிருக்கும் எத்தனை பேர் சுகமாக்கப்பட்டீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். இப்பொழுது, சுகமாக்கப்பட்டவர்கள் அங்கே இருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களால் அதை மறுக்க முடியாது.
நல்லது இப்பொழுது, கானாவூரில் ஒரு அற்புதம் செய்யப் பட்டு, அந்த அற்புதமானது ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வந்து அவர் மேல் விசுவாசம் கொள்ள செய்திருக்குமானால், இன்றிரவு அரிசோனாவிலுள்ள அதற்கும் அதிகமான எத்தனை பேர் கிறிஸ்துவிடம் வந்து, அவரை விசுவாசிக்கும்படி செய்ய வேண்டும்? (அது சரியா?). ஏனெனில் அதற்கும் அதிகமான அளவில் எத்தனை பேர் சுகமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
36இப்பொழுது, இங்கே 48-வது வசனத்தைக் கவனியுங்கள்.
அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.
வேறு வார்த்தையில் சொன்னால், அவன் விசுவாசத்தில் உறுதியாக நிற்கிறானா என்பதைப் பார்க்கும்படி அவர் அவனைக் கடிந்து கொண்டார்.
இப்பொழுது, இன்றிரவு அதே எஜமானர் இங்கே போனிக்ஸிலிருந்து அதைப்போன்ற ஏதோவொன்றை அல்லது மற்றதை கூறுவாரானால், இங்கு என்ன சம்பவிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏன், என்னே, அவர்கள் இங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விடுவார்கள். ஏன், நீங்கள் வரவே மாட்டீர்கள்.
ஆனால் அந்த இராஜாவின் மனுஷன் அப்படிப்பட்ட ஒரு மனிதனல்ல. அவன் ஒரு தாழ்மையான மனுஷன். முக்கியமான காரியம் என்னவெனில், கிறிஸ்துவை தன்னுடைய மகனிடத்தில் அழைத்து வருவதாகும். ஆனால் நீங்கள் பாருங்கள், ஜனங்கள் அப்படிப்பட்ட மனப்பான்மையைக் கொண்டுள்ளனர், அவர்கள் கூறுகின்றனர்... நல்லது, அவர்கள் மற்றவர்களை விட தாங்களே முன்னுரிமை பெற வேண்டுமென்று நினைப்பவர்கள். அவர்கள் ஒருபோதும் தேவனிடமிருந்து எதையும் பெறுவதில்லை. பின்னால் இருக்க விருப்பமாயிருந்து, மற்றொருவருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒருவர் யாரோ அவர் தான் தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்பவர்.
அன்றொரு இரவு ஒரு சிறிய ஸ்திரீ கூட்டத்தில் பின்னால் உட்கார்ந்திருந்தாள். அவள் ஊனமுற்றவளாயிருந்து, கக்கதண்டத்தால் நடந்து வந்தாள். அவளுடைய நேரமானது வந்து, அவளுடைய ஜெப அட்டை எண் அழைக்கப்பட்டது. புற்று நோயால் அவதிப்பட்ட ஒரு சீமாட்டி பின்னால் உட்கார்ந்திருப்பதை அவள் கண்டாள். அவள் அவளை அனுப்பினாள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) அந்த ஒருவரே.
37'...இதற்குப் பிறகு, பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது, நீங்கள் எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.' அது அரிசோனாவிலுள்ள போனிக்ஸையும் உள்ளடக்கி தான் சொல்லப்பட்டது. அது சரியே. 1948 - ம் வருடம், மார்ச் மாதம் 4 - ம் தேதியாகிய இன்றிரவும், பரிசுத்த ஆவியானவர் சபையில் ஊற்றப்பட்ட அந்த நாளில் இருந்தவாறே அவருடைய வல்லமை யானது இன்னும் மாறாததாய் உள்ளது. அப்படியானால், அவருடைய ஆசீர்வாதங்களின் தங்கக் கோப்பையின் அரசாட்சியை ருசி பார்த்தவர்களாகிய ஜனங்களாகிய நீங்கள், இன்றிரவு உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கவோ அல்லது இங்குள்ள உங்கள் ஒவ்வொருவரையும் நிறைக்கவோ இங்கிருக்கும் பரிசுத்த ஆவியைத் தவிர வேறு எதையும் நீங்கள் எவ்வாறு விசுவாசிக்க முடியும்?
என்னே, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பாரானால், அவருடைய வல்லமையும் மாறாதது. அவர் ஒரு வரம்புக்குட்பட்டவரல்ல, அவருடைய வல்லமையும் அவ்வாறே. அவர் செய்துள்ள காரியங்களை சாட்சிக்கு மேல் சாட்சியாக மணிக்கணக்கில் இங்கே நின்று கொண்டு என்னால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். ஆனால் நான் ஐம்பது வருடமாக பேச முடிவதைக் காட்டிலும் யாரோ ஒருவருக்கு அவர் அருளிய சுகத்தைப் பற்றிய சாட்சியானது அதிக சத்தத்தோடு பேசவல்லது. அது சரியே. அவர் பேசட்டும், நாம் அமைதியாயிருப்போம். அவரால் பேசக் கூடும்.
38இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாகக் கற்பிக்கப்பட்டுள்ளீர்கள். இது எவ்வாறு வருகிறதென்று நீங்கள் அறிவீர்கள். அது பரிபூரண பயபக்தியாக இருக்க வேண்டும். அது கண்களை மூடி தலைகளைத் தாழ்த்தும் வகையில் பயபக்தியாக இருக்க வேண்டும். அது... இது ஒரு விளையாட்டு அரங்கமல்ல. இது தேவனுடைய வீடாகும். இது கிறிஸ்துவை கனப்படுத்துகிற ஒரு ஸ்தலமாகும்.
மேலும் அப்படியானால், இங்கே வேறு ஏதோவொன்றும் உள்ளது. ஏதாவது நபர் ஜெப வரிசையில் வருவாரானால், நான் உங்களை கடுமையாக எச்சரிக்கட்டும். நீங்கள் ஜெப வரிசையில் வர எண்ணினால், முதலில் கிறிஸ்துவுக்கு உங்கள் இருதயத்தைக் கொடுப்பது வரை இங்கு வர வேண்டாம். அப்படியானால் அதில் நிறுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளுமட்டும், நீங்கள் காத்திருங்கள்.
நண்பர்களே, நான் இதை பயபக்தியுடன் கூறுகிறேன். நான் இங்கே நீண்ட காலம் தங்கியிருக்கப் போவதில்லை என்பதை உணர்கிறேன். நம்மில் யாருமே இங்கு அதிக காலம் தங்கியிருக்கப் போவதில்லை. நாம் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறோம். இப்பொழுது, ஒவ்வொருவரும் அதை அறிவீர்கள். நாம் ஏதோவொன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற அறிவில்லாத பதினான்கு வயதிற்கு மேற்பட்ட ஒரு நபரும் இன்றிரவு இங்கில்லை. நீங்கள் இதற்கு கவனம் செலுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது மெய்யாகவே தேவனாக இருந்தால், என்னுடைய ஜெபங்களின் மூலமாக குருடரின் கண்களைத் திறக்கலாம், செவிடரின் காதுகளைக் கேட்கப்பண்ணலாம், முடவர்களை நடக்கப் பண்ணலாம்; நான் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேனோ அதைக் குறித்து நான் நிச்சயமாகவே அறிந்தவனாய் இருக்க வேண்டும். நாம் முடிவுக்கு அருகாமை யில் இருக்கிறோம். அது சரியே.
39கிறிஸ்துவுக்குப் புறம்பேயுள்ள வாலிப ஜனங்களாகிய நீங்கள் அல்லது வயதானவர்களாகிய நீங்கள்... ஓ, நண்பர்களே, தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. இதுவே தருணம். இதுவே வேளை. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாதிருந்தால், அதை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்ளிருப்பவர்களை தேவன் அவரோடு கூட கொண்டு வருவார், மற்ற யாவரும் நியாத்தீர்ப்புக்குள் செல்வார்கள். நீங்கள் இன்றிரவு கிறிஸ்துவுக்குள் இல்லாமலிருந்தால், என்னுடைய வார்த்தைக்குச் செவி கொடுங்கள்; கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்கள்.
இன்றிரவு, நீங்கள் ஆயத்தமாயில்லையெனில் ஆயத்தப்படுங்கள். நீங்கள் ஒரு பாவியாக ஜெப வரிசையில் வருவீர்களானால், உங்களால் முடியாது... நீங்கள், 'ஒரு பாவி வர முடியுமா?' என்று கேட்கலாம். ஆம், ஐயா. ஒரு பாவியால் வர முடியும். ஆனால் தேவன் உங்களுடைய சரீரத்தைத் தொடும் போது, நீங்கள் கிறிஸ்துவுக்குள் வராமலிருந்தால், அதைக் காட்டிலும் மோசமான காரியம் உங்களைப் பின்தொடர்ந்து வரும் என்பதை கவனியுங்கள்.
40இங்கே சில வாரங்களுக்கு முன்பு, ஏதொவொன்றைக் கொண்ட ஒரு ஸ்திரீ ஜெப வரிசையில் வந்தாள்... ஆம்புலன்ஸ் வாகனங்கள் கார் நிறுத்தும் பாதைகளையும் காரியங்களையும் அடைத்து விட்டதைக் குறித்த ஒரு பயங்கரமான கட்டுரையை செய்தித்தாளில் எழுதியிருந்தனர். அந்த சீமாட்டியின் கரத்தைத் தொடுவதற்காக நான் சென்றேன். நான் அவளுடைய கரத்தைத் தொடுவதற்கு முன்பாக, அவள், 'எனக்கு புற்று நோய் உள்ளது' என்றாள்.
நான் அவளுடைய கரத்தைப் பற்றிப் பிடித்து, 'சகோதரியே, அது ஒரு புற்று நோயல்ல, உனக்கு அநேக புற்று நோய்கள் உள்ளன' என்றேன். ஆ, அவளுக்கு ஏறத்தாழ பத்து அல்லது பன்னிரண்டு புற்று நோய்கள் இருந்தன. சரீரத்தின் வெவ்வேறான பாகங்களை அவை பாதித்திருந்தன. என்னுடைய கரமானது வேகமாக வீங்கி, துடிப்புகள் அதனூடாகச் சென்றன.
அவள், 'எனக்காக ஏதாவது செய்ய முடியுமா?' என்று கேட்டாள்.
நான், 'உன்னால் விசுவாசிக்கக் கூடுமானால். ஆனால் நான் அந்த புற்று நோய்களைக் கடிந்து கொள்வேனனானால் அவை மறைந்து போய் விடும், நீ அதை சந்தேகித்தால், அது திரும்பவும் வந்து விடும். நீ கிறிஸ்துவை சேவிக்கவில்லை என்றால் அது திரும்பவும் வந்து விடும்' என்றேன். நான், 'நீ ஒரு கிறிஸ்தவளல்ல என்று அறிகிறேன்' என்றேன்.
அவள், 'இல்லை, நான் கிறிஸ்தவளல்ல' என்றாள்.
பிறகு அவள் என்னுடைய கண்ணை நோக்கிப் பார்த்தாள்... இதையும் நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும், ஏனெனில் அநேக ஜனங்கள் அதை ஏற்கனவே அறிந்துள்ளனர். சில சமயங்களில் நான் அவர்களுடைய கண்களை ஈர்த்துக் கொள்ளும் போது, அவ்வாறு தான் நான் அவர்களை அந்த வாய்க்காலில் (channel) கொண்டு வருகிறேன். நீங்கள் கவனிக்கிறீர்களா? மேலும் அப்படியானால், இது மனதிலுள்ளவைகளைப் படிக்கும் கலையல்ல; இது மனோதத்துவம் அல்ல. அது அவ்விதமிருந்தால், பவுல் அவ்வாறு செய்தான், அவன் அந்த மனிதனை உற்றுப் பார்த்து, அவனை நோக்கி, 'நீ சுகமாக்கப்படுவதற்கான விசுவாசம் உனக்குள்ளதை நான் அறிகிறேன்' என்றான்.
41நான் இதை உங்களுக்கு அருளுவேன். அது அவ்விதமான மனோதத்துவமாக உள்ளது. 'சைசீ (Psyche)' என்ற வார்த்தைக்கு 'சிந்தை (mind)' என்று அர்த்தம். அது கிறிஸ்துவின் சிந்தையாக உள்ளது. மனிதன் அதற்குள் பிரவேசித்து, கிறிஸ்து வின் சிந்தையை அறியும்படியான சிலாக்கியத்தை உடையவனாய் இருக்கிறான்... அல்லேலூயா. என்னே, கிறிஸ்துவின் வாய்க்காலுக்குள் வாசமாயிருப்பது என்பது என்ன ஒரு யதார்த்தமாயுள்ளது. தகுதியற்ற மனிதர்களாகிய நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாக உடன் பிரஜைகளாக இருப்பதற்கு கொண்டு வரப்படுகிறோம்... ஓ, என்னே. நான் இதை அடையும் போது, அது என்னை சத்தமிடச் செய்கிறது...
கவனியுங்கள். தூதர்கள் கூட வர முடியாத ஆட்சி எல்லைக்குள்... 'தூதர்களா?' என்று கேட்கலாம். ஆம், ஐயா. நாம் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம்; தூதர்கள் பணிவிடைக் காரர்களாய் இருக்கிறார்கள். அது சரியே. குமாரரும் குமாரத்திகளும் போகும் இடத்திற்கு வேலைக்காரர்கள் போக முடியாது. அவர்கள் அந்த ஐக்கியத்திற்குள் வர முடியாது, அவர்கள் பணிவிடைக்காரர்களாய் உள்ளனர், நாமோ குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம்.
42கவனியுங்கள். நான் அந்த ஸ்திரீயை உற்று நோக்கி, அவள் ஒரு புகைப் பிடிப்பவள் என்று அறிந்தேன். நான் அவளிடம் கூறினேன்; 'இப்பொழுது, நீ புகைப் பிடிப்பவள்' என்றேன்.
அவள், 'ஆம்' என்றாள்.
நான், 'நீ அதை விட்டு விடு. உன்னுடைய இருதயத்தை கிறிஸ்துவுக்குக் கொடு' என்றேன்.
அவள், 'நான் எந்த சபையில் சேர வேண்டும்?' என்று கேட்டாள்.
நான் அவளிடம், 'நான்... அதை நான் சொல்வதற்கில்லை. அதை நீ தேட வேண்டியவளாயிருக்கிறாய். ஆனால் நீ பரிசுத்த ஆவியைப் பெறாமலிருந்தால், பரிசுத்த ஆவியைப் பெற்று, தெய்வீக சுகமளித்தலையும் பரிசுத்த ஆவியையும் குறித்து பிரசங்கித்து அதை விசுவாசிக்கிற ஏதாவது ஒரு முழு சுவிசேஷ சபைக்குப் போ' என்று கூறினேன்.
அவள் சிறிது நேரம் அங்கேயே படுத்துக் கொண்டிருந்தாள். நான், 'நீ அதைச் செய்வாயா?' என்றேன்.
அவள் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினாள். அவள் வாக்குப் பண்ணி விட்டு, நான் முதல்தடவை அந்த புற்று நோயைக் கடிந்து கொண்ட சிறிது நேரத்திலேயே அந்த துடிப்பு என் கையை விட்டு போய் விட்டது. அவள் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்... (ஒலிநாவில் காலியிடம் - ஆசி.)
அவள் சிறிது காலமே உயிர் வாழ்வாள் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். அந்த ஸ்திரீயோ வியாதிப்படுக்கையை விட்டு எழுந்து விட்டாள். அவள் திரும்பிச் சென்று, தன்னுடைய வேலையை செய்தாள்; அவள் தன்னுடைய அண்டை வீட்டாருடைய வேலையையும் செய்தாள், இன்னும் அந்த சிகரெட்டுகளைப் புகைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கத்தினளாயிருந்தாள்... அந்த சபையைச் சேர்ந்தாள்... அதற்கு முன்பாக சபையைச் சார்ந்தவளாய் இருந்தாள்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) அவளுடைய மேய்ப்பர் கூட... அவர் வேதவாக்கியம் சரியானதென்று புரிந்து கொண்டிருந்தால், யாராவது தேவனால் சுகமாக்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு விட வேண்டும்; அவள் அந்த சிகரெட்டுகளைப் புகைப்பதை விட்டு விட வேண்டுமென்று அவளிடம் கூறினார். மற்றொருவரான சங்கை... பட்டணத்திலுள்ள ஒரு சுவிசேஷ ஊழியக்காரரும் அவளிடம் சென்று அதை செய்ய வேண்டாம் என்று அவளை எச்சரித்தார்.
அவளோ, 'நல்லது, என்னால் அதை விட முடியவில்லை' என்றாள்.
'சகோதரன் பிரன்ஹாமிடமும் சர்வவல்லமையுள்ள தேவனிடமும் நீ வாக்குப் பண்ணினது அதுவல்லவே' என்றார்.
அந்த ஊழியக்காரர் அவளை கடைசியாக சந்தித்த பிற்பாடு, ஒரு சில இரவுகளில் அந்த ஸ்திரீ மாரடைப்பால் மரித்துப் போனாள்.
43பாருங்கள்? ஓ, என்னே. இனிமேல் பாவம் செய்யாதே. இப்பொழுது, நீங்கள் பாவம் செய்தால், உடனடியாக பாவம் செய்தால், உங்களுக்கு நிச்சயமாகவே ஒரு வழக்கறிஞர் உண்டு. ஆனால் நான் கூற விரும்புவது என்னவென்றால், அந்த வழியில் நடக்க வேண்டாம், நீங்கள் பின்பற்றின அதே பாதையைப் பின்தொடருங்கள், ஏனெனில் ஒரு மோசமான காரியம் வந்து கொண்டிருக்கிறது. தேவனுக்கு முன்பாக என்னுடைய சத்தமானது வியாதியை சுகப்படுத்த பிழையற்றதாக இருக்குமானால், அந்த சத்தம் உங்களை எச்சரிப்பதற்கும் மிக முக்கியமாக உள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு மோசமான காரியத்தை நீங்கள் எதிர்நோக்குகிறீர்கள்.
இருதயத்திலும், பெருங்குடலிலும், நுரையீரலிலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இங்கேயுள்ள இந்த சீமாட்டியைக் குறித்து என்ன? ஏன், உங்களுடைய நுரையீரலிலுள்ள கட்டி உங்களைக் கொன்று போடும். அவளுக்கு புற்று நோய் இருந்தது. அவள் இப்பொழுது அந்த தெருவில் ஏன் உயிரோடு ஜீவித்துக் கொண்டிருக்கிறாள்? அவள் எவ்வாறு ஜீவிக்கிறாள்? ஏனெனில் அவள் தன்னுடைய எஞ்சியுள்ள நாட்களில் கிறிஸ்துவை சேவிப்பதாக அவள் தன்னுடைய இருதயத்தில் நோக்கம் கொண்டிருந்தாள். மருத்துவர்களும் காரியங்களும் கூட அதன் காரணமாகத்தான் இருக்கிறது. ஏன், அவள் தேவனை மகிமைப்படுத்தியவாறே தெருவில் மேலும் கீழும் நடக்கும்படி, இன்றிரவும் இங்கே போனிக்ஸ் பட்டணத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறாள், ஏனெனில் அவள் அதைக் குறித்து வெட்கப்படவில்லை. அவள் அதைக் குறித்து எவரிடமும் கூறுவாள். அது சரியே. பாருங்கள், அவள் தேவனை சேவிக்கிறாள்.
44இப்பொழுது, நீங்கள் அந்த நிலைமையிலிருந்தால், இன்றிரவு முதற்கொண்டு நீங்கள் தேவனை சேவிக்கப் போவதாக உங்களுடைய இருதயத்தில் நோக்கம் கொண்டிருங்கள். நீங்கள் ஒரு பாவியாக இருந்தாலும் அதனால் காரியமில்லை, நீங்கள் சுகமாக்கப்படும்படியாக இங்கே வரும்போது, அப்படியே பீடத்தில் விழுந்து, அவருக்கு உங்களுடைய இருதயத்தைக் கொடுங்கள், பிறகு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். இங்கே மேலே வந்து, நீங்கள் எந்த சபைக்குப் போக வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அந்த சபைக்குச் செல்லுங்கள்.
ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அந்த சபையானது தெய்வீக சுகமளித்தலிலும் முழு சுவிசேஷத்தலும் விசுவாசமுள்ள ஒரு சபைதானா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் மற்ற சில சபைகள் உங்களுக்குள் விஷத்தை சேர்த்துவிடும். அதற்குப் பிறகு உங்களுடைய அனுபவத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள். அது சரியே. கிறிஸ்துவின் வருகையில் விசுவாசம் கொண்டுள்ள உண்மையான முழு சுவிசேஷ ஜனங்கள் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள்.
இப்பொழுது, வேறு பிரிக்கப்படும் வேளை இங்கே வந்துள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். தேவன் வேறு பிரிக்கும் கோட்டை வரை வதற்கான வேளை வந்துள்ளது. அது சரியே. சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு சமீபமாய் உள்ளது.
இப்பொழுது, நண்பர்களே, வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஒரு மணி பதினைந்து நிமிட நேரங்கள் கிடைத்துள்ளது. இப்பொழுது, உங்களில் யாருக்காவது கூடுமானால், காத்திருங்கள், இன்றிரவு அவசரப்பட வேண்டாம்.
45நண்பர்களே, இப்பொழுது எனக்குச் செவி கொடுங்கள். நான் என் முழு இருதயத்தோடும் உங்களை நேசிக்கிறேன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் சுகமடைந்தவர்களாக இருப்பதைக் காணவே நான் விரும்புகிறேன். உங்களை சுகமடைந்தவர்களாகக் காணவே நான் இன்றிரவு இங்கே இருக்கிறேன். நான் இளைப்பாறுவதற்கான என்னுடைய விடுமுறையை விட்டு விட்டு, உங்களுக்காக ஜெபிப்பதற்காக இங்கே வந்துள்ளேன், ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று இந்த ஸ்பெயின் தேசத்து ஜனங்களிடம் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஒரு மனிதன் தன்னுடைய வார்த்தையில் உண்மையுள்ளவனாக இல்லை யென்றால், அம்மனிதன் நல்லவனாக இருக்க முடியாது. அது சரியே. என்னுடைய சொந்த எண்ணங்கள் எப்படியிருந்தாலும் அது காரியமில்லை, நான் இங்கே இருப்பதற்கு எனக்கு கடமை உணர்ச்சி இருந்தது. நான் திரும்பவும் வர விரும்புகிறேன். நான் உங்களை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன், இனிமேலும் நேசிப்பேன்.
நீங்கள் பாடின பாடல்களை கேட்பதற்காக உங்களுடைய இசைத்தட்டுகளை வாங்கிக்கொண்டேன். அங்கேயிருக்கும் சகோதரி. கார்சியா ஒரு தனிநபர் பாடலைப் பாடினார்கள். நான் பல மணி நேரமாக கனடாவில் எங்கோ ஓரிடத்தில் இருக்கும் போது, அந்த ஊழியங்களில் இருக்கும் போது, என்னே, என்னே. ஓ, மிகவும் களைப்பாயிருக்கும்...
சில சமயம் அங்கே ஒரே ஆராதனையில், அவர்கள் அநேகர்... ஒரே இரவில் முப்பத்தையாயிரம் ஜனங்கள் அங்கே கூடியிருந்தனர். அங்கே... ஞாயிறு பிற்பகல் மட்டும் ஆயிரத்து எண்ணூறு பேர் பீடத்தண்டை வந்தனர், ஆயிரம் பேர் தங்களுடைய இருதயத்தை கிறிஸ்துவுக்கு கொடுத்தனர். அந்த இரவு நேரத்தில், ஐநூறு பேர் ஒரே சமயத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டனர். அது சரியே.
46இப்பொழுது, உங்களை இரட்சிப்பதற்காகவும், உங்களை சுகமாக்குவதற்காகவும் அவர் இங்கே இருக்கிறார். அநேக சமயங்களில், தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கித்து விட்டு, போய்க் கொண்டேயிருக்கிறேன். ஆனால் உங்களுடைய ஆத்துமாவைக் குறித்தும் கூட உங்களிடம் பேசுவது மிகவும் அவசியமாக இருக்கிறது. எங்கோயிருக்கும் தேவனை சந்திக்கப்போகும் ஒரு ஆத்துமா உங்களிடம் உள்ளது. நீங்கள் பயபக்தியாக இருந்தாக வேண்டும்.
நாம் நம்முடைய தலைகளை வணங்குகையில், பியானோ வாசிக்கும் இங்யேயுள்ள சகோதரியோ, அவர்களில் ஒருவரோ பியானோவின் அருகில் சென்று, 'நம்பிடுவாய்' என்ற பாடலை எனக்காக சிறிது நேரம் இசைப்பார்களா என்று வியக்கிறேன். பியானோவை வாசிப்பவர். சகோதரனே, உங்களுக்கு நன்றி.
இப்பொழுது, இங்கே நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக் கையில், உங்களுக்கு அது தெரியுமா என்று நான் வியக்கிறேன். இன்றிரவிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள்? இன்றிரவிலிருந்து ஐநூறு வருடங்களுக்கு பிற்பாடு நீங்கள் எங்கே இருக்கப் போகிறீர்கள்? அது உங்களுக்குத் தெரியுமா? அநேகமாக எங்கேயோவுள்ள உங்களுடைய கல்லறையை மூடியுள்ள கல்லின் மேல் காற்று வீசி மணல் அதன் மேல் படிய, உங்கள் ஆத்துமா எங்கோ நித்தியத்தில் போய் விடும். நீங்கள் அதை அறிவீர்கள். அது சரிதானே? நல்லது, இன்றிரவிலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் ஒருவேளை அதேவிதமாகவே இருக்கலாம். நாளை இரவு நீங்கள் எங்கே இருக்கப்போகிறீர்கள்? நீங்கள் ஒருவேளை நித்தியத்தில் இருக்கலாம்.
47நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குகையில், நான் வியக்கிறேன், எங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களே, தயவுசெய்து ஒவ்வொருவரும்...
பிதாவே, இப்பொழுது மீண்டும் வியாதியஸ்தரைச் சுகப் படுத்துவதற்கான மகத்தான வேளையானது வந்துள்ளது. நான் இங்கே போனிக்ஸ் பட்டணத்தில் ஏதோவொரு வகையில் - இந்த சிறு வனாந்தரமான பட்டணத்தில் ஏதோவொரு வழியில் விசுவாசம் கொண்டு போராட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இங்கே ஒரு பெரும் குழப்பம் ஜனங்களுடைய மத்தியில் இருப்பது போலத் தோன்றுகிறது. உமக்கு ஒரு சபை உண்டு, இப்பொழுது, மீதியானவர்களை நீர் அழைத்துக் கொண்டிருக்கிறீர். ஓ, நித்திய தேவனே, ஜீவனின் ஆக்கியோனே, இப்பொழுது இவ்வேளையில் பேசும்.
இங்கே இன்றிரவு, ஒருவேளை தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட தேவையுள்ளவர்களாய், உம்மை அறியாத யாராவது ஒருவர் இங்கிருக்கலாம். இங்கே அந்த நபர் இருப்பாரானால், பிதாவே... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) பச்சை நிற விளக்கு, நான் அங்கே போகிறேன். அந்தி கிறிஸ்துவின் மகத்தான அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஓ, தேவனே, இரக்கமாயிரும். இழக்கப்பட்ட நிலையிலுள்ள மூர்க்கத்தனமான ஏதோவொரு பையனோ, பெண்ணோ, மனிதனோ அல்லது ஸ்திரீயோ தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக உம்மிடம் பேச விரும்புவார்களானால், இன்றிரவு அதை அருளும்.
48நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், ஒவ்வொருவரும். ஒரு இரட்சிக்கப்படாத நபர் இருப்பாரானால், அப்படியே உங்களுடைய கரத்தை உயர்த்தி, 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன்; நான் இரட்சிக் கப்படவில்லை' என்று கூறுங்கள். நான் சரியாக இப்பொழுதே அதைச் செய்வேன். இரட்சிக்கப்படாத நபர். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை வெளியில் காண்கிறேன். அங்கேயிருக்கும் நீ, நீ, நீ. அங்கேயிருக்கும் யாரோவொருவர்... சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் தான் சகோதரியே, நான் உன்னுடைய கரத்தைக் காண்கிறேன். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உன்னுடைய கரத்தைப் பார்க்கிறேன். இங்கேயிருக்கும் யாராவது? சிறு சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் உன்னைக் காண்கிறேன். என் சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, என்னுடைய வலது பக்கத்திலுள்ள யாராவது? 'சகோதரன் பிரன்ஹாமே, என்னை நினைவுகூருங்கள். நிச்சயமாகவே கிறிஸ்து எனக்குத் தேவை. இன்றிரவு அவர் எனக்குத் தேவை' என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சிறு பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மேலும் வாலிப ஸ்திரீயாகிய நீங்கள். அங்கே பின்னாலிருக்கும் யாராவது? ஓ, என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.
49ஓ, நண்பர்களே, நீங்கள் அதைக் காணவில்லையா? பழைமை நாகரீகமான ஒரு எழுப்புதல் தான் நமக்குத் தேவை. பழைமை நாகரீகமான துக்கம் நிறைந்தவர்களுடைய இருக்கை தான் நமக்குத் தேவை... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக...?... சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், சகோதரனே. ஆம். நண்பர்களே, இப்பொழுதே தருணம், இப்பொழுதும் கூட.
இன்றிரவு இங்கே நின்று கொண்டிருப்பது களைப்பாயுள்ளது. பரிசுத்த ஆவியானவர் இந்தக் கட்டிடத்தின் மேல் அசைவாடு வதை நான் உணர்கிறேன். உறுதி கொள்ளுங்கள். மானிட இருதயத்திற்கு எது உணர்த்துதலைக் கொண்டு வருகிறது? நாம் அடுத்த வாரம் இதே சமயத்தில் கல்லறையில் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்கிறோம்.
இங்கே சில நாட்களுக்கு முன், ஒரு சிறு பையன் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது, நீர்ப்பாசன சாக்கடைக் குழிக்குள் விழுந்து விட்டான். இரண்டு மணி நேரம் கழித்து அவனை அதிலிருந்து வெளியே இழுத்து வந்தார்கள், அவனுடைய சிறு ஆத்துமா நித்தியத்திற்குள் சென்று விட்டது. நீங்கள் எவ்வளவு சடிதியாக தேவனை சந்திக்கப் போகிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே.
ஓ, பிதாவே, உம்மை நேசிக்கிறவர்கள் மற்றும் இரட்சிக்கப் பட வேண்டுமென்று விரும்புகிறவர்களின் கரங்களை இன்றிரவு நீர் நோக்கிப் பாரும். தேவனே, அநேக ஜனங்கள் இந்த பாபிலோனை விட்டும், குழப்பத்தை விட்டும் வெளியே வந்து, இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க போகிறார்கள். ஓ, இந்த மகத்தான இருள் சூழ்ந்த நேரத்தில், தேசங்கள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள், இவையெல்லாம் வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்களாய் இருக்கின்றன. ஓ, தேவனே, இரக்கமாயிரும். அவர்கள் அங்கே அமர்ந்திருக்கிற வேளையில், மன்னிக்கப்படுதலின் சமாதானத்தைக் குறித்து அவர்கள் ஆத்துமாவோடு நீர் பேச வேண்டுமாய் நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். அதை அருளும், தேவனே.
அவர்கள், 'தேவனே, என் மேல் இரக்கமாயிரும். இன்றிரவு நான் ஒரு பாவியாயிருக்கிறேன். நான் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். நீர் உம்முடைய எச்சரிப்பின் சத்தத்தை அனுப்பினீர் என்று விசுவாசிக்கிறேன். நான் இரட்சிக்கப்பட வேண்டுமேன்று விரும்புகிறேன்' என்று கூறிக்கொண்டும், தங்கள் முழங்காலை முடக்கி அவ்வாறு உம்மிடம் கதறுவது வரையில் அவர்கள் இன்றிரவு படுக்கைக்குப் போகாதிருப்பார்களாக. தேவனே, இதை அருளும். அவர்கள் உம்மிடம் தாழ்மையோடு வந்து, இரட்சிக்கப்படுவார்களாக. உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென்...?...
50ஒவ்வொருவரும் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது, இங்கே ஒரு அவிசுவாசி இருந்தால், கட்டிடத்திலேயே தங்கியிருக்க வேண்டாம். நான் ஒரு பிரசங்கியல்ல. நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் உண்மையாகவே பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, தாய்மார்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்களுடைய பக்கத்திலேயே வைத்திருங்கள். என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன் நடந்த கூட்டங்களில் நீங்கள் அதைக் கண்டுள்ளீர்கள். சில சமயங்களில் இந்த பிசாசுகள் வெளியே வந்து, (ஒரு நபரை விட்டு) மற்ற ஜனங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அவைகள் அப்படியே ஒருவருடமிருந்து மற்றவரிடம் சென்று விடுகின்றன. அவைகள் கூட்டத்திற்குப் பின் கூட்டமாக ஜெப வரிசையை அடைய முயற்சி செய்து, ஒருவரிடம் புகுந்து கொள்ளப் பார்க்கின்றன.
எப்போது என்று எனக்குத் தெரியாது. நான் கடல் கடந்து போகிறேன். போனிக்ஸில் நான் இருப்பது இதுவே கடைசி தடவையாக இருக்கலாம். எனவே, எனக்கு - எனக்கு அது தெரியாது. நான் உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். எனவே நான் இங்கிருந்து செல்லும்போது, நீங்கள் என்னிடம், 'உண்மையாகவே, தேவன் என்னை அனுப்பினார்' என்று சொல்லுவீர்கள் என்பதை நான் அறிவேன். இன்றிரவு என்னால் கூடுமான எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் செய்யப்போகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு அவசியமாயுள்ளது.
51இப்பொழுது, கவனியுங்கள். உங்களுடைய சகோதரி யுடனான காரியம் என்ன? அது உங்களுடைய சகோதரியா? என்ன சொல்லுகிறீர்கள்? அன்பான சகோதரியே, இப்பொழுது கவனியுங்கள். அநேக காரியங்கள் சரியாக வேண்டுமென்று நீங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேக மில்லை.
ஒரு சமயத்தில், சில குஷ்டரோகிகள் பிச்சையெடுப்பதற்காக ஒலிமுக வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பட்டணமானது அசீரியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
அவர்கள், 'நாம் சாகும் வரை ஏன் இங்கு அமர்ந்திருக்க வேண்டும்? பட்டணத்திற்குள் போவோமென்றாலும் நமக்கு அங்கேயும் சாப்பிட ஏதுமில்லை' என்றார்கள். (2 இராஜா. 7:3-4) அவர்கள் பட்டினியால் மரித்துக்கொண்டிருந்தனர்; அவர்கள் ஒருவர் மற்றவர்களின் பிள்ளைகளைப் புசித்தனர். அவர்கள் அங்கே இருந்தாலும், நிச்சயமாக சாவார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு மாத்திரம் இருந்தது, அது என்னவென்றால், சத்துருவின் பாளையத்துக்குச் செல்வது தான். அவர்கள்... 'அவர்கள் நம்மைக் கொன்றால் - நாம் எப்படியானாலும் மரிக்கத்தான் போகிறோம். ஏனெனில் நாம் இங்கே இருந்தாலும் மரிக்கத்தான் போகிறோம். நாம் அந்த வழியாகப் போனாலும் மரிக்கத்தான் போகிறோம். நாம் இங்கேயிருந்தாலும் மரிக்கத்தான் போகிறோம். நாம் அங்கே போவோம். அவர்கள் நம்மைக் கொன்றால், ஏன், நாம் வறுமையில் இருக்கிறோம். ஏனெனில் நாம் எப்படியும் மரிக்கத்தான் போகிறோம். ஆனால் அவர்கள் நம்மேல் இரக்கம் வைத்தால், ஏன், அவர்கள் - ஏன், நாம் பிழைக்கப் போகிறோம்' என்றார்கள்.
52அவர்கள் அங்கே சென்றனர். தேவன் அவர்களுடைய அம்மாதிரியான விசுவாசத்தைக் கனம்பண்ணி, அவர்களுக்கு பலனளித்தார். அவர் அந்த வனாந்தரத்தில் பெரும் இரைச்சலை வரப்பண்ணினார். இஸ்ரவேலர் அநேக யுத்த வீரர்களை வாடகைக்கு வாங்கியிருக்கிறார்கள் என எண்ணிக் கொண்டு, அவர்கள் (சத்துருக்கள் - தமிழாக்கியோன்.) ஓடிப்போனார்கள்.
குஷ்டரோகிகள் கூடாரங்களுக்குள் போய், அங்கே ஜீவனும், ஆகாரமும், திராட்சை ரசமும் இருக்கக் கண்டார்கள். அவர்கள் தங்கள் பிராணனை மாத்திரமல்ல, முழு பட்டணத்தையும் இரட்சித்தார்கள்.
இப்பொழுது, இன்றிரவு, நீங்கள் சத்துருவின் கூடாரத்திற்கு வர வேண்டுமென்று நான் கேட்கவில்லை. உங்களுக்கு காசநோய் (tubercular) உள்ளது என்று நான் உணர்கிறேன். இங்கே இந்த அருமையான ஸ்தலத்திலும் கூட அது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை உள்ளது, நீங்கள் இருக்கிற விதமாக, உங்களுடைய காசநோயின் (tubercular) காரணமாக நீங்கள் நிச்சயம் மரிப்பீர்கள். அது சரியே. நீங்கள் அதை உணர்ந்துள்ளீர்கள்.
இப்பொழுது, நீங்கள் - நீங்கள் - நீங்கள் தேவனை விசுவாசியுங்கள், அவ்வாறு செய்ய மாட்டீர்களா? இப்பொழுது, தேவனுடைய தூதனானவர் என்னிடம் வந்து சொன்னபடி, நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பது போல, என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். அந்த சம்பவத்தைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள், அப்படித்தானே சகோதரியே? அது எவ்வாறு வந்ததென்ற கதையை நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டதுண்டா? கர்த்தருடைய தூதன் என்னிடம் வந்ததை? ஆம்.
53நான் அந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது. நான் ஒரு பையனாய் இருந்த முதற்கொண்டு, எனக்கு அந்த அழைப்பு இருந்தது என்பதை உணர்ந்தேன். நான் அந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) தரையில் நடக்கும் சத்தம் கேட்டது. இயற்கைக்கு மேம்பட்ட ஒருவர் அந்த அறைக்குள் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த தூதனானவர் தாம் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறினார். அவர், 'ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், நீ ஜெபிக்கும் போது உத்தமமாக இருந்தால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது, புற்று நோயும் கூட நிற்காது' என்றார்.
அப்படியானால் நீங்கள் என்னிடம், 'சகோதரன் பிரன்ஹாமே, ஒவ்வொருவரும் சுகமடைகிறார்களா?' என கேட்கலாம்.
உண்மையாகவே விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் சுகமடைகிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சுகமடைந்துள்ளனர். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.)
நீங்கள் இப்பொழுது விடுவிக்கப்பட்டீர்கள். அது உங்களுடைய மனைவியா? நான் எவ்வாறு எண்ணுகிறேன் என்றும் அது என்னுடைய மனைவியாக இருந்தால் எவ்வாறு உணருவேன் என்றும் அறிவேன்.
வெளிப்படையாகச் சொன்னால், ஒரு நாள், என்மனைவி ஒரு பெட்டியில் படுத்திருந்தாள். காசநோய். அது சரியே. அதன் காரணமாகத்தான் அப்பிசாசை நான் வெறுக்கிறேன். அவனும் என்னை வெறுக்கிறான். சில வருடங்களுக்கு முன்னால், அவன் தான் என் குடும்பத்தை சுக்கு நூறாக உடைத்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருந்த அன்பார்ந்தவர்களை என்னை விட்டு எடுத்துக்கொண்டவன். நான் இன்று அவன் மேல் வல்லமை யுள்ளவனாக இருப்பதால், அதன் காரணமாகத்தான் நான்-நான் அவன் துரத்தப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன்.
என் அன்பார்ந்த சகோதரனே, நான் - நான் உம்மிடம் கூறுகிறேன்; நாம் ஒருவேளை நம்முடைய ஜீவியத்தில் ஒருபோதும் இனி சந்திக்காமலே இருக்கலாம். ஆனால் உம்முடைய அன்பு மனைவி, இந்த தூதனானவர் என்னிடம் வந்து, இதை சொன்னார் என்று தன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாளானால், அவள் சுகமடைந்து ஒரு சந்தோஷமான ஸ்திரீயாக இருப்பாள். இப்பொழுது, சகோதரியே, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. உன்னுடைய கட்டிலை விட்டு நீ எழுந்து நடந்து, இந்த கட்டிடத்தை விட்டு உன்னுடைய சொந்த பெலத்தோடு உன்னால் போகக் கூடும். நாளை, நீ உன்னுடைய வேலையை செய்து கொண்டிருப்பாய். புற்று நோயிலிருந்து சுகமடைந்த இங்கேயிருக்கும் இந்த சீமாட்டியைப் போல.
54இப்பொழுது, காசநோயை சுகப்படுத்துவது, புற்று நோயை சுகப்படுத்துவதைக் காட்டிலும் தேவனுக்கு கடினமான தல்ல. அது உண்மை. அந்த துடிப்பு போய், அந்த ஸ்திரீ எழுந்து, தேவனை விசுவாசித்து, சென்று விட்டாள் என்பதை பார். அவளுக்குச் சொல்லப்பட்டதை அவள் விசுவாசித்தாள். அது சரியா, சகோதரியே? அவளிடம் சொல்லப்பட்டதை அவள் விசுவாசித்தாள், அந்த புற்று நோய் கிருமி சரியாக அவளில் மரித்துப் போய் விட்டது. அவளுடைய மருத்துவர் ஒருவேளை இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கலாம். அவரைப் பார்க்க வரும்படி என்னிடம் ஆளனுப்பியிருந்தார், அவர் என்னுடைய கரத்தை குலுக்க விரும்புவதாகச் சொன்னார். அந்த ஸ்திரீயுடைய x-ray படங்களை என்னிடம் காட்ட விரும்பினார். சரி.
இப்பொழுது, அவளால் விசுவாசிக்கக் கூடுமானால், உன்னால் விசுவாசிக்கக் கூடாதா?
இங்கே ஒரு ஊழியக்காரரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அது எங்கிருந்து என்று தெரியவில்லை... அது ஒரு ஸ்பானிய சபை. அது என்னுடைய கடிதக் கட்டில் உள்ளது. அதில் முன்னும் பின்னும் ஒரு படம் இருக்கிறது. அவர் காசநோயின் காரணமாக இங்கே நின்று கொண்டிருந்தார். அது மிகவும் பயங்கரமான காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியது. அவருக்கு மூச்சு விடவே கடினமாயிருந்தது; அவர் மிகவும் பெலவீனமாக இருந்தார். மேலும் அவர் சரியாக இங்கேயே சுகமாக்கப்பட்டார். புற்று நோய். தேவன் எவ்வாறு... அவருடைய சாட்சி மருத்துவர்களின் குறிப்பேட்டிலேயே காணப் பட்டது... மூன்று அல்லது நான்கு மருத்துவர்களின் பெயர்கள் அதன் கீழே உள்ளன, அதைப்போன்று. புற்று நோயிலிருந்து பரிபூரணமாக சுகமடைந்தவராக அங்கிருந்து வெளியேறினார்.
55அது மட்டுமா? நூற்றுக்கணக்கான x-ray படங்கள் எங்களிடம் உள்ளன. அவைகளில் ஒன்றை நீங்கள் காணப் போகிறீர்கள்... இப்பொழுது, கூட்டங்களில், ஜெபவரிசையினூடாகக் கடந்து போகும் எழுபது முதல் எண்பது சதவீதம் ஜனங்கள் தொண்ணூறு நாட்கள் இடைவெளியில் சுகமடைந்துள்ளனர். இங்கிருக்கும் நீங்களும் கூட சுகமடைவீர்கள். முப்பது சதவீதம் பேர் சுகமடையவில்லை. இப்பொழுது, நீங்கள் அந்த இரண்டு வகைக் கூட்டத்தினரில் ஒரு வகையினராக இருப்பீர்கள். இன்றிரவு அந்த சுகமடையும் எழுபது சதவீத ஜனங்களாக இருந்து சுகமடையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இப்பொழுது, சகோதரர்களும் மற்றும் காரியங்களும்... சகோதரன் ஜோசப் எங்கே இருக்கிறார்? அவர் எங்கே இருக்கிறார்? உங்களுக்கு நன்றி. சகோதரன் ஜோசப் ஜெப அட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அவருக்கு அது தெரியாது. அவரால் ஸ்பானிய மொழியைப் பேச முடியாது... அவருடைய வார்த்தைகளை உச்சரிக்க.
இப்பொழுது, எஞ்சியுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டு மென்று நான் விரும்புகிறேன் என்பதை உங்களிடம் கூறப் போகிறேன். நீங்கள் அவிசுவாசிகளாக இருப்பீர்களானால்... இப்பொழுது, இங்கே இந்த அரங்கத்தில் நடந்த கடைசி கூட்டத்தை ஞாபகத்தில் கொள்ளுங்கள். அந்தப் பிசாசு அவன் மேல் வருகிறதான அம்மனிதன் ஒருவேளை இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கலாம். அவன் இங்கே போனிக்ஸில் நின்று கொண்டு, அது ஒரு மனோதத்துவம் என்று சொன்னான். அம்மனிதன் மேற்கு வழியாக வந்து, இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள முயற்சித்தான்.
கடந்த இரவில், அவருடைய மனைவியாகிய சான்டா ரோசா அங்கே வந்து, சகோதரன் பிரௌனையும் என்னையும் பிடித்துக் கொண்டாள். நாங்கள் நடந்து வந்து கொண்டிருந்த பாதையில் ஏறக்குறைய விழுந்து விட்டாள். அரிசோனாவிலுள்ள போனிக்ஸிலிருந்து வரும் அவளுடைய கணவனார் தம்முடைய கண்கள் வீங்கினவராய் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அம்மனிதன் இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இருக்கிறாரா? நீங்கள் இங்கிருந்தால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அங்கே, அவருடைய... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) அந்த மனிதருடன் 45 நிமிடங்களுக்கும் அதிகமாக அங்கே இருந்தேன். அதற்குப் பிறகு, அந்த பிசாசு அவரை விட்டு வெளியே வந்தது. அவர் தம்முடைய சரியான சிந்தைக்கு வந்து, வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். அது மனோதத்துவம் என்று அவர் கூறினார். ஆனால் ஒரு சில நாட்களில், அவரிடம் பிசாசு புகுந்து கொண்டது... வினோதமான ஒரு உணர்ச்சி அவர் மேல் வந்தது. அங்கே அவர் அதைப்போன்று நடந்து கொண்டிருந்தார்... பட்டணத்திலுள்ள போலீசார் அவரைப் பிடித்தனர்.
56இப்பொழுது, நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால், கட்டிடத்திலேயே தரித்திருங்கள். நீங்கள் விசுவாசியாக இல்லை யென்றால், இங்கிருக்க வேண்டாம். அதாவது வெளியில், அங்கு தான் நீங்கள் இருக்க வேண்டும். இப்பொழுது, நான் உங்களை அழைப்பதை நீங்கள் கேட்கும் வரை, நீங்கள் உங்களது தலையை தாழ்த்தியபடியே இருங்கள்.
இப்பொழுது, இது ஒரு மத வெறித்தனம் அல்ல. அவ்வாறு எண்ண வேண்டாம். இது ஒரு மத வெறித்தனம் அல்ல. நியாயத்தீர்ப்பின் நாளில் தேவன் அதற்காக நம்மை பதில் கூறச் செய்வார். அது சரியா? அங்கே எல்லா இருதயத்தின் இரகசியங்களும் மூடப்படாது.
தேவன் அதை நடப்பிப்பதற்கு முன்பதாகவே நான் அதை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் உண்மையான பயபக்தியோடு தலையைத் தாழ்த்தியவாறு இருங்கள். நீங்கள் இந்த ஒலிப்பெருக்கியில், 'உங்கள் தலையை உயர்த்துங்கள்' என்று சொல்லும் என் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நான்...
ஏதாவது சம்பவிக்க வேண்டுமானால், ஒரு அற்புதம்... அற்புதங்கள் சம்பவிப்பதற்கு எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அவைகள்... என்னுடைய வரமானது அற்புதங்களைச் செய்யும் வரமல்ல; என்னுடைய வரமானது சுகமாக்கும் வரமாகும். அனைவரும் அதைப் புரிந்து கொண்டீர்கள், இல்லையா? அங்கு ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் உள்ளன. ஆனால் அநேக நேரங்களில், தேவனுடைய தூதனானவர் அற்புதங்களை நடப்பிக்கிறார்.
57சமீபத்தில், இங்கே இந்த அரங்கத்தில் நின்று கொண்டு, இந்த அற்புத வரிசையில் எதையும் கொண்டு வர நான் அந்நாளில் சவால் விட்டதை எத்தனை பேர் ஞாபகம் கொண்டுள்ளீர்கள்? போதகர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, கீழே விழுந்து, மேடைக்கு வந்து, ஒவ்வொருவரையும் சுகமாக்கும்படி அற்புதத்தின் ஜெபவரிசைக்கு அவர்களைக் கொண்டு வருவது தேவனுக்கு சித்தமா என்று என்னிடம் கேட்டார்கள். அது அவருடைய சித்தமாக இல்லாதிருக்கு மானால், என்னை சந்தித்து, அதைச் செய்ய வேண்டாமென்று கூறும் தூதனிடம் நான் அதைக்குறித்துக் கேட்டு, பிறகு அதை நிறுத்தியிருப்பேன்.
அந்த அரங்கத்தில் என்ன சம்பவித்தது என்று எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? செவித்திறன் குறைபாடுடைய ஒரு மனிதன் கூட செவிடனாகவே சென்றான். ஒரு சிறு பெண்ணும் அதே விதமாகச் சென்றாள். அது சரியா? அது சரிதான்.
இப்பொழுது, நீங்கள் கவனியுங்கள், நான் காத்துக் கொண்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் பரிபூரணமான வழிநடத்துதலை நான் உணரும் போது, நான் பேசுகிறேன்.
இப்பொழுது, இன்றிரவு நான்... என்னுடைய மனைவி யையும் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த பட்டணம் முழுவதையும் சுற்றிப்பார்க்கச் சென்றேன்.
58இப்பொழுது, கவனியுங்கள். நான் நாளை ஜெபத்தில் தரித்திருக்கப் போகிறேன். நான் அனேகமாக நாளை இரவைக் குறித்து அதிகமாக அறிந்து வைத்துக்கொள்ளப் போகிறேன். ஆனால் இன்றிரவு, இப்பொழுது ஜெப வரிசையில் இருக்கும் நீங்கள், நீங்கள் - நீங்கள்... ஜெப வரிசையை எப்படி அமைக்க வேண்டுமென்று சகோதரன் ஜோய் உங்களிடம் கூறுவார். நீங்கள் ஒருவர் பின் ஒருவராக மேலே வரலாம்.
மேலும் இப்பொழுது, நான் போனிக்ஸ் பட்டணத்தை விட்டு செல்வதற்கு முன், தேவ ஒத்தாசையினால் இந்த வாசலினூடாக கடந்து செல்லும் ஒவ்வொரு வியாதியஸ்தருக்கும் நான் ஜெபிப்பேன் என்று வாக்களிக்கிறேன். என்னால் செய்ய முடிந்த ஒவ்வொன்றையும் நான் செய்வேன். நான் - நான் சொல்ல வேண்டுமென்று கருதுவது உங்களுக்காக ஜெபிப்பதைத் தான். நான் இந்தக் கட்டிடத்தை விட்டு செல்வதற்கு முன்பாக, நான் அறிந்த விதத்தில் மிகச்சிறந்த விதத்தில் நான் வந்து உங்களுக்காக ஜெபிப்பேன்.
இப்பொழுது, நான் உங்களிடம் சொன்ன இந்த காரியங்களை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (இங்கேயுள்ள ஜெபிப்பதற்கான இடம் இதுதானா? ஒரு சிலர் ஜெபவரிசையில் வர நான் விரும்புகிறேன்.)
இந்த காரியங்கள் உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவைகள் உண்மையென்று விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நான் என் முழு இருதயத்தோடும் தேவனிடம் உத்தமமாக கேட்டால், நீங்களும் அதே விதமாக அவரை விசுவாசிப்பீர்களா?... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) நீங்கள் சுகமடைவீர்களென்று? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. ஒவ்வொருவரும் உங்களுடைய தலைகளைத் தாழ்த்த நான் விரும்புகிறேன்.
பிதாவே, உம்முடைய தூதனை நீர் எங்கள் மத்தியில் அனுப்ப வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். உம்முடைய ஊழியக்காரன்...?... இன்றிரவு, ஆனால் அந்த அறையில் அன்றிரவு என்னை சந்தித்து இந்த காரியங்களை என்னிடம் பேசிய தேவ தூதனானவர், கடந்த 22 மாதங்களாக என்னருகில் நின்று கொண்டிருக்கிறார். அவர் இன்றிரவும் என்னருகில் நிற்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர் தேவனுடைய காரியங்களை எடுத்து, அவைகளை உம்முடைய ஊழியக்காரனிடம் பேசுவாராக... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)... எங்கள் எல்லாருடைய மத்தியிலும். நீர் அதை பெற்றுக் கொள்ளப் போகிறீர்...?... நான் இப்பொழுது ஒரு விசை கூட முயற்சிக்கிறேன். எனவே நான் இயேசுவின் நாமத்தில் வருகிறேன்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
ஓ, தேவனே, எனக்கு உதவி செய்யும். நான் எல்லா துதியையும் மகிமையையும் உமக்கே செலுத்துகிறேன். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
59இப்பொழுது உங்கள் தலைகளை உயர்த்துவீர்களா? நான் ஜெபிப்பதற்காக அறைக்குள் செல்கையில். நான் கேட்கிறேன்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
(ஒரு ஸ்பானிய ஊழியக்காரர் பேசுகிறார் - ஆசி.)
இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்தியாய் இருந்தவாறே உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள். தேவன் ஒரு அற்புதத்தை செய்ய வேண்டுமானால், இப்பொழுது உண்மையாகவே பயபக்தியாய் இருங்கள். இப்பொழுது நான் அறிய விரும்புகிற முதலாவது காரியம் என்னவெனில், நீங்கள் அனைவரும் உங்கள் முழு இருதயத்தோடும் உறுதியாக விசுவாசிப்பீர்களா? நீங்கள் அவ்வாறு விசுவாசித்தால், இப்பொழுது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். மேலும் இப்பொழுது... இப்பொழுது, நான் சிறிது நேரம் உங்களோடு பேசும் போது, நீங்கள் அப்படியே உங்கள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டிருங்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
மற்றவர்களை ஆசீர்வதிக்க எனக்கு உதவி செய்யும். கர்த்தாவே, இதை அருளும். அவ்வாறு செய்வீரா? இப்பொழுது, உம்முடைய ஊழியக்காரரான என்னுடைய சகோதரன் சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவராய் இங்கே நின்று கொண்டிருக்கி றார். இப்பொழுது அந்த இரத்தத்தில் சர்க்கரை உள்ளதாக உணருகிறோம். இன்னும் ஒரு சில திருப்பங்களில், வெறும் ஒரு சிறு இடம், கைகளும் கால்களும் விழுந்து போகும், அதன் பிறகு சாத்தானுக்கு வெற்றி கிடைத்து விடும். இந்த தேவனுடைய ஊழியக்காரனின் வாழ்க்கை குறுகிப்போகும் படியாக அவருடைய மீதி வாழ்க்கை முழுவதும் அவர் படுக்கையில் கிடத்தப்பட்டு விடுவார். இப்போதும், தேவனே, அவன் பல காரியங்களை முயற்சித்து விட்டான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றிரவு அவன் வரவில்லை, சோதிக்கவுமில்லை. அவர் இன்றிரவு சுகமடைய வேண்டுமென்று வந்திருக்கிறார். அதை அருளும், பிதாவே. நீர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பீர் என்று அறிவேன். நீர் குருடரின் கண்களைத் திறக்கவும், செவிடர்களையும், ஊமையர்களையும், முடவர் களையும் சுகமாக்கவும் இங்கே இருக்கிறீர். என்னுடைய சகோதரனுக்கு ஜீவ ரத்தத்தை எவ்வளவு அதிகமாகக் கொடுப்பீர். நான் இப்பொழுது இந்த சர்க்கரை நோயைக் கடிந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மனிதனை விட்டுப் போகட்டும். நீ அவரை அதிக நாள் பிடித்து வைத்திருந்ததற்காக தேவன் உனக்கு இரண்டு மடங்கு ஆக்கினையைக் கொடுப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை விட்டு வெளியே வர நாங்கள் கேட்கிறோம்.
எப்படியிருக்கிறீர்கள், ஐயா? மருத்துவர்கள் சொல்லுவதைப் பொறுத்தது...?... உங்களால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடுமானால்...?... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.)
60இப்பொழுது, இந்த நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரனை நோக்கிப் பாரும். இங்கிருக்கும் நீர் அவருக்கு சுகத்தைக் கொடுத்து, அவரை விடுவியும். நீர் தவறுவதில்லை. நீர் நித்தியத்திலிருந்து நித்தியம் வரை உள்ள தேவனாக இருக்கிறீர். காலங்கள் கடந்து செல்கின்றன. நீர் மனிதனை உயர்த்தி, மனிதனைத் தாழ்த்துகிறீர்; இராஜாக்களை உயர்த்தி, இராஜாக்களைத் தாழ்த்துகிறீர்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) உம்முடைய வரங்களை அனுப்புகிறீர். நீர் உன்னதத்திற்கு ஏறி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தீர். இப்பொழுது, என்னுடைய சகோதரன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிதாவே, நீர் அவரை சுகப்படுத்த வேண்டுமென்று என்னுடைய முழு இருதயத்தோடும் உத்தமமாக ஜெபிக்கிறேன். காசநோயின் காரணமாக உள்ள இந்த இருமலை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கடிந்து கொள்கிறேன். அது அவரை விட்டு விலகி, அது ஒருபோதும் இனிமேல் திரும்பி வராதிருக்கட்டும். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.) ...?... அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று சொல்ல முடியுமா? இப்பொழுது, நாம் அப்படியே மருத்துவர்களிடமிருந்து வருகிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் மிக முக்கியமான விதமாக அதை அணுகவில்லையெனில், தேவன் கூறுவதை நான் செய்வேன் என்று சொன்னேன்.
அவர்கள் குழந்தையை உள்ளே கொண்டு வந்து, அதனுடைய சிறு கரத்தை என் மேல் வைத்தனர்... இப்பொழுது, அது மிகவும் சத்தமாக வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களுடைய மருத்துவரும் உள்ளேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு முன்பதாக அவர்கள் மருத்துவரிடம் சென்றிருந்தனர்.
நான், 'சரி, ஐயா. இந்த சிறு குழந்தைக்கு பலவீனமான சிறுநீரகம் உள்ளது. அது இரவில் படுக்கையை நனைத்து விடுகிறது. மற்றொரு காரியம் என்னவெனில், அது சமீபத்தில் அது சாப்பிட்ட ஆகாரம் அனைத்தையும் வாந்தி பண்ணிப் போட்டது, ஏனெனில் அவனுக்கு வயிற்றில் ஒரு வேதனை உள்ளது' என்றேன்.
அவர், 'சகோதரன் பிரன்ஹாமே' என்றார். 'மருத்துவரே, நீர் அதைக் கேளும்' என்றார். அவர்கள் அங்கே இருந்தனர். அது மருத்துவர் அவர்களிடம் சொன்னவிதமாகவே இருந்தது. 'இப்பொழுது, என்னுடைய மனைவி' என்றார். அவள் அங்கே வந்தாள்.
நானோ, 'குழந்தையானது தாயிடமிருந்து சிறுநீரக கோளாறைப் பெற்றுக் கொண்டான். ஏனெனில் அவளுக்கும் கூட சிறுநீரகத்தில் பிரச்சனை உள்ளது. மற்றொரு காரியம் என்னவெனில், நீ எல்லா நேரமும் உண்மையாகவே சோர்வோடு கூட பய உணர்ச்சியையும் கொண்டிருக்கிறாய், இல்லையா?' என்றேன். நான், 'உனக்கு சுமார் 40 வயதாகிறது. நீ ஜீவியத்தில் அந்த மாற்றத்தினூடாகச் சென்று கொண்டிருக்கிறாய்' என்றேன்.
'அதைத்தான் சரியாக மருத்துவரும் சொன்னார்' என்றார்.
61இப்பொழுது, அவர் என்னிடம் சொன்னார்... அவர் அதன் மேலாக தன்னுடைய கரத்தை வைத்தார்; அவர் ஒரு ஒலிபரப்பு நிலையத்திற்கு சொந்தக்காரராய் இருந்தார். மேலும் அவர்... நான், 'நல்லது, நீர் அதைக் குறித்து கவலைப்பட்டு, அதைக் குறித்து தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர். ஆனால் ஒரு காரியம் என்னவெனில், உமக்கு காசநோய் உள்ளதாக எண்ணிக் கொள்ளுகிறீர். ஆனால் உமக்கு நூரையீரல் சவ்வின் அலர்ஜியால் உம்முடைய ஒரு பக்கத்தில் வலியுள்ளது' என்றேன்.
அவர், 'அது அப்படியே...' என்றார். (மருத்துவர் கவனித்துக் கொண்டிருந்தார்), 'மருத்துவர் நேற்று என்னிடம் சரியாக அதைத் தான் சொன்னார்' என்றார்.
நான், 'இப்பொழுது, மருத்துவர் உம்மிடம் கூற முடியாத ஏதோவொன்று இங்குள்ளது. நீர் இரண்டு நினைவுகளால் குழப்பமடைந்துள்ளீர். நீர் தேவனை சேவித்துக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறீர், இதைப்போன்று இந்த ஒலிபரப்பை நீர் தொடர்ந்து செய்ய விரும்புகிறீர். ஆனால் உமக்கு (தேவ) அழைப்பும் உள்ளது, நீர் ஊழியத்திற்குப் போகவும் விரும்புகிறீர்' என்றேன். மேலும் நான், 'நீர் செய்ய வேண்டுமென்று நான் உமக்கு கூறும் ஆலோசனை என்னவெனில், இந்த ஒலிபரப்பைக் குறித்த காரியத்தை மறந்து விட்டு, வயல்நிலத்திற்குச் (ஊழியக்களத்திற்கு - மொழிபெயர்ப்பாளர்) செல்லுங்கள்' என்றேன்.
அவர் தன்னுடைய கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, கதறினார். அந்த மனிதன் இங்கே சகோ. பாஸ்வர்த்தின் சபையில் ஒரு அங்கத்தினராக இருக்கிறார். அது சரியே. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்.
எனவே நீங்கள் கவனியுங்கள், அது பரிபூரணமாய் உள்ளது. தேவனால் பொய் சொல்ல முடியாது, அவர் தேவனாக இருக்கிறார். அது சரியா? இப்பொழுது, அது நானல்ல; அது அவரே. இப்பொழுது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க முடியவில்லையா? ஆமென். இப்பொழுது, ஒவ்வொரு வரும் அப்படியே உங்கள் தலையைத் தாழ்த்தி, உண்மையாகவே பயபக்தியோடு இருங்கள்.